TN TET தேர்வுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – முழு பாடத்திட்டம் & தேர்வு முறை!

0
TN TET தேர்வுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு - முழு பாடத்திட்டம் & தேர்வு முறை!
TN TET தேர்வுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு - முழு பாடத்திட்டம் & தேர்வு முறை!
TN TET தேர்வுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – முழு பாடத்திட்டம் & தேர்வு முறை!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றுவதற்கான இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தகுதி தேர்விற்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் கீழே விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

TN TET தேர்வு:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வினை நடத்தி வருகிறது. டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் படித்தவர்கள் இந்த தேர்வினை எழுதலாம். இந்த ஆசிரியர் தகுதி தேர்விற்கான பாட திட்டங்கள் அனைத்தும் கீழே விவரமாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. அதாவது முதல் தாளை டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி பயின்றவர்கள் எழுதலாம். இரண்டாம் தாளை பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எழுதலாம் மற்றும் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் முதல் தாளையும் எழுதலாம். இந்த தகுதி தேர்வினை எழுதுவதற்கு தேர்வாளர்கள் கண்டிப்பாக 12 ஆம் வகுப்பு தேர்வில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) முடித்திருக்க வேண்டும். இரண்டாம் தாள் எழுதுவதற்கு ஏதோ ஒரு பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ அல்லது B.Ed முடித்திருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே இந்த தகுதி தேர்வினை எழுதலாம்.

IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 7,000+ ரன்களை கடந்து ‘தல’ தோனி புதிய சாதனை!

முதல் தாளில் 150 கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரம் நடக்கும் இந்த தேர்வில் மொழிப்பாடம் 30 மதிப்பெண்ணுக்கும், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் 30 மதிப்பெண்ணுக்கு, ஆங்கிலம் 30 மதிப்பெண்ணுக்கும், கணிதம் 30 மதிப்பெண்ணுக்கும், சுற்றுச்சூழல் கல்வி 30 மதிப்பெண்ணுக்கும் நடைபெறும்.

முதல் தாளிற்கான பாட திட்டங்கள் இதோ,

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 6 – 11 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்.

மொழிப்பாடம்: சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

ஆங்கிலம்: மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள்: கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.

இரண்டாம் தாள்: 150 மதிப்பெண்ணுக்கு நடக்கும் இந்த தேர்வில் 150 கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரம் நடக்கும் இந்த தேர்வில் மொழிப்பாடம் 30 மதிப்பெண்ணுக்கும், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் 30 மதிப்பெண்ணுக்கு, ஆங்கிலம் 30 மதிப்பெண்ணுக்கும், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு 60 மதிப்பெண்ணுக்கும் நடைபெறும்.

இரண்டாம் தாளிற்கான பாட திட்டங்கள் இதோ,

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 11 – 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்.

மொழிப்பாடம்: சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

ஆங்கிலம்: மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு: கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.

இந்த தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/ என்கிற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும், விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் ரூ. 500 மற்றும் SC, SCA, ST மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ரூ.250 செலுத்தவேண்டும். இந்த தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர் ஏப்ரல் 13 தான் கடைசி தேதி என்பதால் ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும், இது குறித்தான விவரங்களை அறிய விரும்பினால் http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf க்கு சென்று தெரிந்துகொள்ளவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!