குட்டி தம்பி அர்சுடன் விளையாட துடிக்கும் ஐலா பாப்பா – அழகிய தருணங்களை ரசிக்கும் ஆலியா! வைரலாகும் வீடியோ!

0
குட்டி தம்பி அர்சுடன் விளையாட துடிக்கும் ஐலா பாப்பா - அழகிய தருணங்களை ரசிக்கும் ஆலியா! வைரலாகும் வீடியோ!
குட்டி தம்பி அர்சுடன் விளையாட துடிக்கும் ஐலா பாப்பா - அழகிய தருணங்களை ரசிக்கும் ஆலியா! வைரலாகும் வீடியோ!
குட்டி தம்பி அர்சுடன் விளையாட துடிக்கும் ஐலா பாப்பா – அழகிய தருணங்களை ரசிக்கும் ஆலியா! வைரலாகும் வீடியோ!

ஆலியாவிற்கு தற்போது தான் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளார். ஷூட்டிங் இருக்கும் காரணத்தினால் சஞ்சீவ்வால் குழந்தையுடன் நேரம் செலவிட முடியவில்லை. ஆனால், ஆலியா அர்ஷ்சுடன் இருக்கும் ஒவ்வொரு தருணங்களையும் ரசித்து கொண்டிருக்கிறார்.

ஆலியா & சஞ்சீவ்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பபட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். சமூக வலை பக்கங்கள் முழுவதுமே ஆலியாவிற்கு குழந்தை பிறந்த விஷயம் குறித்து தான் அனைவரும் பேசி கொண்டிருக்கின்றனர். ஆலியா ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து கொண்டிருந்த போதே இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். ஆலியாவிற்கு ஏற்கனவே ஐலா என்கிற அழகிய பெண் குழந்தை இருக்கிறது. ஆலியா கர்ப்பமாக இருப்பதை தெரிந்ததும் சீரியலில் இருந்து விலகிக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ExamsDaily Mobile App Download

ஆனால், பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை ஆலியா ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்தார். சீரியலில் இருந்து விலகிய சில நாட்களில் ஐலா பாப்பாவின் பிறந்தநாள் அன்று ஆலியாவிற்கு வளைகாப்பும் நடைபெற்றது. தற்போது ஆலியாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஆண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம், பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைக்கலாம் என முடிவு செய்துவிட்டனர். அதன்படி அந்த குழந்தைக்கு அர்ஷ் எனவும் பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்து வீட்டிற்கு அழைத்து சென்ற போது கூட புதிதாக வாங்கிய 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரில் தான் கூட்டி சென்றனர்.

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் விரைவில் ஆலோசனை!

குழந்தையின் முகத்தை முதன் முறையாக ஆலியா தனது ரசிகர்களுக்கு காண்பித்தார். குழந்தையுடன் எப்படி நேரத்தை செலவிடுகிறீர்கள் என சஞ்சீவிடம் கேட்ட போது ஐலா பிறந்த பொழுது கொரோனா ஊரடங்கின் காரணமாக வீட்டில் தான் இருந்தேன். இதனால் ஐலா பாப்பாவுடன் முழு நேரத்தையும் செலவிட்டு வந்தேன். ஆனால், இம்முறை ஷூட்டிங் இருக்கும் காரணத்தினால் அர்ஷ்சுடன் நேரத்தை செலவிட முடியவில்லை என கூறியுள்ளார். தற்போது ஐலா பாப்பாவிற்கு ஒரு குட்டி தம்பி வந்தவுடன் அவரும் குஷியில் இருக்கிறார். ஆலியா தற்போது அர்ஷ்சுடன் இருக்கும் ஒவ்வொரு அழகிய தருணங்களையும் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!