CBSE பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் – அரசு வெளியீடு!

0
CBSE பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் - அரசு வெளியீடு!
CBSE பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் - அரசு வெளியீடு!
CBSE பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் – அரசு வெளியீடு!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் சி.பி.எஸ்.இ தேர்வு வாரியம் முக்கிய தகவல் ஒன்றிணை வெளியிட்டுள்ளது. மேலும் இது குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு:

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது. மேலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 24ம் தேதியும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதியும் நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் சி.பி.எஸ்.இ மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் மாணவர்கள் கல்லூரி சேர்க்கைக்கு தாமதமாவதால் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடும் படி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 15ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூலை இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியானது.

அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ஜூலை 26 வரை விடுமுறை – அரசு அறிவிப்பு!

அதன்படி சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் டெர்ம் 2 அதிகாரப்பூர்வமான இணையதளத்தில்
cbse.gov.in, cbresults.nic.in வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியலை சி.பி.எஸ்.இ  அதிகாரப்பூர்வமான இணையத்தளமான cbseresults.nic.in மற்றும் results.gov.in ஆகியவற்றிலிருந்து பார்த்து கொள்ளலாம் என்றும்  அதே போல் இந்த தேர்வு முடிவுகளை டிஜிலாக்கர் மற்றும் உமங் ஆப்ஸ் மூலமும் சரிபார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தொலைபேசியின் மூலம் ரிசல்ட் தெரிந்து கொள்ள போன் மெசேஜ் பாக்ஸ் சென்று சி.பி.எஸ்.இ 12 என டைப் செய்து பிறகு மாணவர்களின் ரோல் எண்ணை  ஸ்பேஸ் விட்டு டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்பினால் உங்கள் ரிசல்ட் ஐ போன் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!