தமிழகத்தில் ஏப்.29ம் தேதி பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் சித்திரை தேர்த்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 அன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
உள்ளூர் விடுமுறை:
திருச்சி ஸ்ரீரங்கம் திருக்கோவிலில் மாதம் 12 பல்வேறு வைபவங்கள் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயத்தின் பிரதான திருவிழாவான வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தில் நடைபெறும். அதன் பின்னர் தை தெப்பம், கருட சேவை, பங்குனி ரதோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று அதிகாலை கொடி ஏற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. கொடியேற்ற நிகழ்விற்காக அதிகாலை 2.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்றம் மண்டபம் வந்தடைந்தார்.
TN Job “FB
Group” Join Now
அங்கு நம்பெருமாள் கக்கு மங்கள ஆரத்தி எனப்படும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கொடி படத்திற்கு பட்டர் சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்யப்பட்டு மீன லக்னத்தில் சரியாக 5.05 மணிக்கு மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் ரெங்கா ரெங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர். இதனை தொடர்ந்து 10 மணி அளவில் சித்திரை வீதிகள் சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் வைபவமும் நடைபெற்றது. நேற்று முதல் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் நான்கு ரத வீதிகளில் வலம் வருவார். முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சித்திரைத் தோ்த்திருவிழாவை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுா் விடுமுறை அறிவித்து ஆட்சியா் சு. சிவராசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 24 முதல் ஜூன் 14 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
இந்த உள்ளூர் விடுமுறை திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இருப்பினும் பள்ளி, கல்லூரி தோ்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை நாள் அன்று மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவலக வேலைகளில் எந்த இடையூறும் ஏற்படாமல், மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும் என குறிப்பிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்ய வரும் மே 7ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.