Jio 5ஜி மொபைல் விலை எவ்வளவு? முக்கிய தகவல் இதோ!

0
Jio 5ஜி மொபைல் விலை எவ்வளவு? முக்கிய தகவல் இதோ!
Jio 5ஜி மொபைல் விலை எவ்வளவு? முக்கிய தகவல் இதோ!
Jio 5ஜி மொபைல் விலை எவ்வளவு? முக்கிய தகவல் இதோ!

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஜியோ நிறுவனம் 4ஜி சேவையை தொடர்ந்து தற்போது 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் 5ஜி மொபைல் போனையும் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விலை குறித்தும் 5ஜி ஃபியூச்சர் மொபைல் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்தும் இப்பதிவில் பார்ப்போம்.

5ஜி மொபைல்

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ நிறுவனம் பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன்வசம் கொண்டு முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. ஏனெனில் இந்நிறுவனம் 4ஜி சேவையை மிகவும் குறைந்த கட்டணத்தில் பல்வேறு வகையான பலன்களை பெற முடிகிறது. இதையடுத்து இந்நிறுவனம் 5ஜி சேவையை விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதம் முதல் அல்லது தீபாவளி முதல் 5ஜி மொபைலையும் அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் 5ஜி மொபைலின் விலை 12 ஆயிரத்திற்குள் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த குறைந்த விலைக்கு அறிமுகம் செய்தால் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் 5ஜி மொபைலை மிகவும் குறைந்த விலைக்கு அறிமுகப்படுத்திய பெருமை ஜியோ நிறுவனத்தையே சாரும். மேலும் 5ஜி மொபைலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 SoC, 4ஜிபி ராம், 32 ஜிபி உட்புற சேமிப்பு, 6.5 இஞ்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 13 மெகா பிக்சல் பின்புற கேமரா, 8 மெகா பிக்சல் முன் புற கேமரா, பிரகத்தி ஓஎஸ் ஆகிய பலன்கள் கிடைக்கும்.

இந்திய தபால்துறையின் புதிய திட்டம் – ரூ.399 செலுத்தினால் 10 லட்சம் வரை ரிட்டன்ஸ்!

மேலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பியூச்சர் போனிலும் 4ஜி சேவையுடன் ஜியோ போனை அறிமுகம் செய்துள்ளது. இதையடுத்து ஜியோ போன் என்ற மற்றொரு மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. அதனால் வர இருக்கும் 5ஜி சேவையுடன் பியூச்சர் போன் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் ஜியோ போன் நெக்ஸ்ட் மாடலை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஜியோ சிம் கார்டு மட்டுமே பயன்படுத்த முடியும். மற்ற சிம் கார்டுகளை பயன்படுத்தினால் அழைப்புகளை மட்டுமே மேற்கொள்ள இயலும். அதனால் 5ஜி மொபைல் போனில் எல்லா நெட்வொர்க் சிம் கார்டுகளும் பயன்படுத்தலாமா? என்பது குறித்த அப்டேட் இன்னும் வெளிவரவில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!