இந்திய தபால்துறையின் புதிய திட்டம் – ரூ.399 செலுத்தினால் 10 லட்சம் வரை ரிட்டன்ஸ்!

0
இந்திய தபால்துறையின் புதிய திட்டம் - ரூ.399 செலுத்தினால் 10 லட்சம் வரை ரிட்டன்ஸ்!
இந்திய தபால்துறையின் புதிய திட்டம் - ரூ.399 செலுத்தினால் 10 லட்சம் வரை ரிட்டன்ஸ்!
இந்திய தபால்துறையின் புதிய திட்டம் – ரூ.399 செலுத்தினால் 10 லட்சம் வரை ரிட்டன்ஸ்!

இந்தியா தபால் துறை பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் தற்போது ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினரும் சேமிக்கத் தொடங்கி உள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது புதிய திட்டம் ஒன்றை தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து இப்பதிவில் காண்போம்.

விபத்து காப்பீடு:

இந்தியாவில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் தான் மக்கள் சேமிப்பின் பயனை உணர்ந்தனர். ஊரடங்கால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்த நிலையில் ஏராளமானோருக்கு அவர்களின் சேமிப்பு கைக்கொடுத்தது. மேலும் கொரோனா மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவ காப்பீடு பயன்பட்டது. இதனால் தற்போது மக்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேமிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அஞ்சல் துறை மற்றும் வங்கிகள் ஏராளமான எளிய சேமிப்பு மற்றும் காப்பீடு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் அஞ்சலகத்தில் மாதாந்திர சேமிப்பு திட்டம், பிஎப் திட்டம், மூத்த குடிமக்கள் திட்டம், செல்வமகள் திட்டம், கிராம சுரக்ஷா யோஜனா திட்டங்கள் நடைமுறை இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தபால் துறையின் போஸ்ட் பேமண்ட் வங்கியானது முன்னணி காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் 18 வயது நிரம்பியவர் முதல் 65 வயது உள்ளவர்கள் வரை சேரலாம். இவர்கள் தங்களின் விரல் கைரேகையை பதிவு செய்து ரூ. 399 செலுத்தி திட்டத்தில் இணையலாம்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விதிகள் அமல்!

இந்த காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு விபத்தினால் உயிரிழப்பு, உடல் பாதிப்பு, பக்கவாதம், நிரந்தர முழு உடல் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டால் ரூ. 10 லட்சம் காப்பீடு தொகையாக வழங்கப்படும். மேலும் மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சமாக ரூ. 60,000 வழங்கப்படும். அத்துடன் புற நோயாளி செலவுகளுக்கு ரூ.30,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களின் கல்வி செலவுக்காக ரூ. 1 லட்சம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here