ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விதிகள் அமல்!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புதிய விதிகள் அமல்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புதிய விதிகள் அமல்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விதிகள் அமல்!

இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கார்டு திட்டம் நடைமுறை இருந்து வருகிறது. இந்த நிலையில் சில புகார்கள் வந்ததை அடுத்து தற்போது ரேஷன் கார்டு விதிகளில் மாற்றம் செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் ரேஷன் கார்டு திட்டம் மூலம் மக்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கு நாட்களில் அனைத்து மாநிலங்களிலும் அரசு மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டமும் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான தொழிலாளர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

தற்போது ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை மத்திய உணவு வழங்கல் துறை மாற்றி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ரேஷன் கார்டு திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதில் வசதி படைத்தோரும் பயன் பெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இவர்கள் ரேஷன் கடை மூலமாக மலிவு விலையில் பொருட்களை வாங்கி அவற்றை வெளிச் சந்தையில் அதிக விலைக்கும் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வில்லியாக அவதாரம் எடுக்கும் ராதிகா, அதிர்ச்சியில் பாக்கியா & குடும்பம் – எதிர்ப்பாராத ட்விஸ்ட்!

இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு தகுதி படைத்தோர்களுக்கு பொருட்கள் கிடைக்காமல் போகிறது. இது போன்ற மோசடிகளை தடுக்கவே ரேஷன் கார்டு விதிகள் மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி இனி வரும் நாட்களில் தகுதியற்றவர்கள் ரேஷன் கார்டு மூலம் பயன் பெற முடியாது. இந்த புதிய விதியில் ஒன்றாக மத்திய அரசு வறுமைக் கோட்டின் தரத்தை மாற்ற உள்ளது. இதன் மூலம் வறுமைக் கோட்டுப் பட்டியலில் இருந்து பலரும் வெளியேற வாய்ப்புள்ளது. அதன் பிறகு தகுதி பெற்றவர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை பெற முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here