‘மன்னிப்பு கேட்க சொல்லி இருக்கலாம்’ – நடிகை சமந்தாவிற்கு அறிவுரை கூறிய நீதிமன்றம்!

1
'மன்னிப்பு கேட்க சொல்லி இருக்கலாம்' - நடிகை சமந்தாவிற்கு அறிவுரை கூறிய நீதிமன்றம்!
'மன்னிப்பு கேட்க சொல்லி இருக்கலாம்' - நடிகை சமந்தாவிற்கு அறிவுரை கூறிய நீதிமன்றம்!
‘மன்னிப்பு கேட்க சொல்லி இருக்கலாம்’ – நடிகை சமந்தாவிற்கு அறிவுரை கூறிய நீதிமன்றம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றவர் நடிகை சமந்தா. அவரது விவாகரத்து தொடர்பாக பல YouTube சேனல்கள் வதந்திகளை பரப்பியது குறித்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் புதிய அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது.

நடிகை சமந்தா:

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து நம்பர் 1 நடிகையாக புகழ் பெற்றவர் சமந்தா. அவருக்கு 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யா உடன் காதல் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்தனர். அதற்கு முன்னதாக பல சேனல்களில் இவர்களது விவகாரத்திற்கான காரணங்களை பற்றிய வதந்திகள் பரவியது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ‘பிரபல’ காமெடி நிகழ்ச்சிக்கு எண்ட் கார்டு – கவலையில் ரசிகர்கள்!

அதில், தன்னைப் பற்றி அவதூறாக தகவல்கள் பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீதும், தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாக பேசிய வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் மீதும் சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று (அக்.22) ஹைதராபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினி விலகல்? இது தான் காரணமா? வெளியான உண்மை தகவல்!

இந்த விசாரித்த நீதிபதி கூறுகையில், சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்கு தொடர்வதை விட அவர்களை நடிகை சமந்தா மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம். சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று இல்லை. சமந்தாவின் வழக்கை நடைமுறைப்படி நீதிமன்றம் விசாரிக்கும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் விவாகரத்திற்கு பின் நடிகை சமந்தா பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!