IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்திய MS தோனியின் ஷாட் – வைரலாகும் வீடியோ!

0
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்திய MS தோனியின் ஷாட் - வைரலாகும் வீடியோ!
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்திய MS தோனியின் ஷாட் - வைரலாகும் வீடியோ!
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்திய MS தோனியின் ஷாட் – வைரலாகும் வீடியோ!

சமீப காலமாக IPL போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொண்டு வரும் கேப்டன் MS தோனியின் சூப்பர் ஷாட்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களை அலங்கரித்து ரசிகர்களிடைய உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

MS தோனி

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் மார்ச் 26ம் தேதி துவங்க இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2022 கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) உடன் மோதுகிறது. இந்த சீசனிலும் வழக்கமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக கடந்த சில நாட்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியினர் தங்களது பயிற்சி ஆட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த பயிற்சியில் CSK அணியின் கேப்டன் MS தோனி, ராபின் உத்தப்பா, ஷிவம் துபே, U19 நட்சத்திரம் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மாநிலத்தில் மார்ச் 17 முதல் மீண்டும் இரவு ஊரடங்கு அமல்? அரசு விளக்கம்!

இந்த பயிற்சி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் எம்எஸ் தோனி சூப்பர் ஃபார்மில் இருக்கும் நிலையில், அவர் பயிற்சி ஆட்டத்தின் போது அடிக்கும் பெரிய ஷாட்டுகள் தொடர்பான வீடியோ ஒன்று நேற்று (மார்ச்.12) வெளியாகி இருக்கிறது. இது குறித்த வீடியோவை CSK அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஆதார் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

அதில் சூரத்தில் உள்ள மைதானத்தில் வலைப்பயிற்சியின் போது தோனி பந்தை ஒரு பெரிய சிக்ஸருக்கு அடிக்கும் வீடியோவை வெளியிட்டு, ‘ஷாட் மச்சி! One for the fam back home! #WhistlePodu #Yellove’ என்று ஹேஷ்டேகை பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. இதற்கிடையில் IPL 2022 போட்டிகளில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பான பயோ குமிழியை பராமரிப்பதன் காரணமாக இந்த ஆண்டு அனைத்து ஆட்டங்களும் மகாராஷ்டிராவில் வைத்து மட்டுமே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!