தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கு ஹாப்பி நியூஸ் - அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கு ஹாப்பி நியூஸ் - அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற வருகின்ற மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.

பட்டதாரிகளுக்கு உதவித்தொகை:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகளும், கல்லூரிகளும் அரசின் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் நிறைய தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளும் தொடங்கப்பட்டது. இந்த வருடம் கண்டிப்பாக 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் சார்பில் பொதுத் தேர்வுக்கான தேதிகளையும் அறிவித்து உள்ளனர்.

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் நடத்தும் ஆலோசனை!

இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தத் தொகையை பெறுவதற்கு பொதுப்பிரிவு இளைஞர்களுக்கு உங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும் என்றும், அதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளி பட்டதாரிகளுக்கு ஒரு ஆண்டு போதும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது என்னவென்றால், இந்த உதவித்தொகை பெறுவதற்காக, கிராம நிா்வாக அலுவலா், வருவாய்த்துறை அலுவலர் ஆகியோரின் கையொப்பம் (இது மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை இல்லை) முத்திரை பெற்று படிவத்தை முழுமையாக நிறைவு செய்து வருகின்ற மே 31ஆம் தேதி வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மையமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல், அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், நகல்களுடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here