தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – போக்குவரத்துத் துறை அமைச்சர் முக்கிய உத்தரவு!

0
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - போக்குவரத்துத் துறை அமைச்சர் முக்கிய உத்தரவு!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - போக்குவரத்துத் துறை அமைச்சர் முக்கிய உத்தரவு!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – போக்குவரத்துத் துறை அமைச்சர் முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரி நேரங்களில் அனைத்துப் பேருந்துகளையும் இயக்க வேண்டுமென போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

முக்கிய உத்தரவு:

தமிழகத்தில், போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் வியாழக்கிழமை அன்று, போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர், மேலும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கூறியது, பெண்களுக்கு சாதாரண பேருந்துகளில் கட்டணம் இல்லாத பயணம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால், சாதாரணக் கட்டணம் மேலும் வியாழக்கிழமை வரையிலான காலத்தில் 126.10 கோடி மகளிர் பயணம் செய்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

ஆனாலும், சாதாரணக் கட்டணப் பேருந்துகள் இயக்கப்படாத பகுதிகளைக் கண்டறிந்து பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும் கொரோனா தொற்றுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், மாணவ – மாணவிகளின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள வழித்தடங்களில் கூடுதலாக அனைத்து நகரப் பேருந்துகளையும் இயக்கிட வேண்டும். இதையடுத்து தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி பேருந்துகள் இயக்கம், வழித்தடத்துக்கான ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தினசரி பணி ஒதுக்கீடு போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடியில் நாளை (ஜூன் 18) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும் பயணக் கட்டணத்தை தவிா்த்து, விளம்பரம் மூலம் இதர வருவாயைப் பெருக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும் என்று அமைச்சா் சிவசங்கா் கேட்டுக் கொண்டார். சில தினங்களுக்கு முன்பு பெரம்பலூரில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கர், செய்தியாளர்களிடம் கூறியது, பள்ளிப் பேருந்துகளை முழுமையாக ஆய்வு செய்ய வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பள்ளிப் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, கண்காணிப்பு கேமரா பொருத்த பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக வழங்கப்படும் பஸ் பாஸ் அட்டையை, ஸ்மார்ட் அட்டையாக வழங்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் அட்டை வழங்கும் வரை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பஸ் பாஸ் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!