Reliance Jio பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 30 நாட்களுக்கான ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!
ரிலையன்ஸ் ஜியோ 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் ரூ.181, ரூ.241, ரூ.259, ரூ.296, ரூ.301 ஆகிய ரீசார்ஜ் திட்ட பிளான்களை அறிமுகம் செய்திருக்கிறது. மேலும், இந்த ரீசார்ஜ் பிளான்களுக்கு 4ஜி சேவைகளை வழங்குகிறது.
ஜியோ பிளான்
நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல புதிய சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது, ஜியோ நிறுவனம் குறைவான விலையில் நிறைவான ரீசார்ஜ் பிளான்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், ஜியோ நிறுவனம் தற்போது 30 நாட்கள் வரைக்கும் செல்லுபடியாகும்படியான பல புதிய ரீசார்ஜ் திட்ட பிளான்களை அறிமுகம் செய்திருக்கிறது. மேலும், ஜியோ நிறுவனம் அனைத்து ரீசார்ஜ் பிளான்களுக்கும் 4ஜி சேவைகளை வழங்குகிறது.
TN Job “FB
Group” Join Now
முதலில், 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் ரூ.181 ரீசார்ஜ் திட்டத்தில் 30GB வரையிலான 4ஜி சேவைகளை வழங்குகிறது. 30GB திட்டத்திற்கு பிறகு 30 நாட்கள் வரையிலும் 64kbps இணைய சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்ததாக 30 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.241 ரீசார்ஜ் திட்டத்தில் 40GB 4ஜி சேவைகள் வழங்கப்படுகிறது. அதாவது, ரூ.241 பிளானில் ரூ.181 ரீசார்ஜ் திட்டத்தை போலவே கூடுதலாக 10GB வழங்கப்படுகிறது. அடுத்ததாக 30 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.259 ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா சேவைகள் வழங்கப்படுகிறது.
தமிழக மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டம் – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
அது மட்டுமல்லாமல் 100 SMS, கட்டணமில்லா அளவற்ற கால் சேவைகளும் வழங்கப்படுகிறது மற்றும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகிய சேவைகளும் வழங்கப்படுகிறது. அடுத்ததாக ரூ.296 ரீசார்ஜ் திட்டத்தில் 25 GB டேட்டா, 100 SMS, இலவச போன் கால் மற்றும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகிய சேவைகளும் வழங்கப்படுகிறது. மேலும், ரூ.301 ரீசார்ஜ் திட்டத்தில் 50GB டேட்டா, 100 SMS, இலவச போன் கால் மற்றும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகிய சேவைகளும் வழங்கப்படுகிறது.