ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மாவட்ட ஆட்சியரின் உத்தரவு!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மாவட்ட ஆட்சியரின் உத்தரவு!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மாவட்ட ஆட்சியரின் உத்தரவு!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மாவட்ட ஆட்சியரின் உத்தரவு!

திருப்பூர் மாவட்ட ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குவதில்லை, கைவிரல் ரேகை பதிவாகாதவர்களுக்கு பொருட்கள் கிடைக்கவில்லை என்று ரேஷன் அட்டைதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தரமான பொருட்களை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ரேஷன் கடை:

தமிழகத்தில் மாநில அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்கள் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் மலிவு விலையில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் திமுக தலைமையிலான அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பும் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைந்தனர் .

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளதாக புகார்கள் எழுந்து வருகிறது. பல ஆண்டுகளாகவே ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரம் குறைவாக உள்ளது என்றும் அதில் அரிசி கல், மண், தூசிகள் உள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதே போல தற்போது திருப்பூர் மாவட்ட ரேஷன் அட்டைதாரர்களும் அதே புகாரை அளித்துள்ளனர். தரமான அரிசி வழங்குவதில்லை; கைவிரல் ரேகை பதிவாகாத காரணத்தால் பொருள் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர்.

சிறந்த ரோல் மாடல் விருதை ஆளுநர் கையால் வாங்கிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் சுஜிதா – வைரலாகும் புகைப்படம்!

இதனையடுத்து தரமான அரிசி வழங்கப்பட வேண்டும். மேலும் கிடங்குகளில் உள்ள தரமற்ற அரிசியை, உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பல நேரங்களில் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. எனில்,பதிவேட்டில் பதிவு செய்து பொருட்கள் வழங்கலாம். ரேஷன் கடை தொடர்பான புகார்களுக்கு, தனி தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!