சிறந்த ரோல் மாடல் விருதை ஆளுநர் கையால் வாங்கிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் சுஜிதா – வைரலாகும் புகைப்படம்!

0
சிறந்த ரோல் மாடல் விருதை ஆளுநர் கையால் வாங்கிய
சிறந்த ரோல் மாடல் விருதை ஆளுநர் கையால் வாங்கிய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தனம் சுஜிதா - வைரலாகும் புகைப்படம்!
சிறந்த ரோல் மாடல் விருதை ஆளுநர் கையால் வாங்கிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் சுஜிதா – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் கலக்கி வரும் நடிகை சுஜிதாவிற்கு தெலுங்கானா மாநில ஆளுநர் கையால் சிறந்த ரோல் மாடலுக்கான விருது கிடைத்துள்ளது. அது குறித்த புகைப்படத்தை அவர் ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகை சுஜிதா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டாப் வரிசையில் இருக்கும் முன்னணி சீரியல் ஆகும். இது சின்னத்திரையில் நெகட்டிவ் கதாபாத்திரம் இல்லாத ஒரே சீரியல் என்ற பெருமைக்குரியது. இந்த சீரியலின் ஆணி வேராக தனம் கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதா நடித்து வருகிறார். அவர் குழந்தை நட்சத்திரமாக நடிப்பு துறையில் அறிமுகமானவர். அதன் பின் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் குழந்தை பிறப்பிற்கு பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கம் பேக் கொடுத்தார்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் அவர் சீரியல் தவிர்த்து தனியாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா தனுஷ் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தனது யூடுயூப் சேனலில் இல்லத்தரசிகளுக்கு தேவையான பல வீடியோக்களை பதிவிடும் சுஜிதா, இன்ஸ்டா பக்கத்திலும் பல போட்டோஷூட் புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் vs பாக்கியலட்சுமி மெகா சங்கமம் பற்றிய சூப்பர் அப்டேட் – ரசிகர்கள் உற்சாகம்!

சமீபத்தில் நடந்த விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் இந்த சீரியலுக்கு பல விருதுகள் கிடைத்தது. மக்கள் கொண்டாடும் தொடர், சிறந்த நாயகன் போன்றவற்றில் இந்த சீரியலுக்கு விருது கிடைத்தது. இந்நிலையில் தனமாக நடித்து வரும் சுஜிதாவிற்கு சிறந்த ரோல் மாடல் என்ற விருதை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் வழங்கி இருக்கிறார். அது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் சுஜிதா பெருமையுடன் பகிர்ந்து இருக்கிறார். ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!