மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மேலும் 4% அகவிலைப்படி உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மேலும் 4% அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மேலும் 4% அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மேலும் 4% அகவிலைப்படி உயர்வு!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜூலை 1ம் தேதி மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அகவிலைப்படி:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. பணவீக்கம் உயர்ந்தாலும், ஊழியர்களின் வாழ்க்கை நிலை பாதிக்கப்படாமல் இருக்க இந்த அகவிலைப்படி தொகை அவர்களுக்கு பயன் பெற்று வருகிறது. இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட ஊராடங்கால் ஏற்பட்ட பொருளாதார சரிவால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தப்பட்டது.

Exams Daily Mobile App Download

இக்காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் உயர்வால் அகவிலைப்படியை மீண்டும் வழங்கவும் அதனை உயர்த்தவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்தது அகவிலைப்படி 2 கட்டங்களாக உயர்த்தி 31% ஆக வழங்கப்பட்டது. அதன் பிறகு மேலும் 3% உயர்த்தப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் 34% ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் சுமார் 1.16 கோடி ஊழியர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது 7வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜூலை மாதம் மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு? முழு விவரம் இதோ!

அதாவது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு புள்ளி விவரங்களின் படி அகவிலைப்படி 4 சதவீதம் வரை உயரும் என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் AICPI புள்ளிகள் 0.1 புள்ளிகள் குறைந்து 125 ஆகவும் இருந்தது. பிறகு மார்ச் மாதம் 1 புள்ளி ஏற்றம் கண்டு ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் 126 ஆக இருந்து வருகிறது. இந்த AICPI குறியீடு 126 க்கு மேல் சென்றால் அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர்த்த வாய்ப்பு உள்ளது. 4 சதவீதமாக உயர்த்தப்பட்டால், ஒட்டுமொத்த அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக அதிகரிக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!