TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு? முழு விவரம் இதோ!

0
TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு - கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு? முழு விவரம் இதோ!
TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு - கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு? முழு விவரம் இதோ!
TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு? முழு விவரம் இதோ!

கடந்த 21ம் தேதியன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு தேவைப்படும் என்றும் எத்தனை மதிப்பெண் எடுத்தால் மெயின் தேர்வுக்கு படிக்கலாம் என்ற விவரங்களையும் இப்பதிவில் விரிவாக காணலாம்.

குரூப் 2 தேர்வு

தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டித்தேர்வுகளை நடத்தி ஆட்சேர்ப்பு பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் இடை நிறுத்தி வைக்கப்பட்ட TNPSC தேர்வுகளை நடத்துவதற்கு திட்டமிட்ட அரசாங்கம், இந்த ஆண்டு குரூப் 2 தேர்வுகளை நடத்தி முடித்திருக்கிறது. இதை தொடர்ந்து TNPSC ஆணையம் வரும் மாதத்தில் குரூப் 4 தேர்வை நடத்த இருக்கிறது. இப்படி இருக்க சமீபத்தில் முடிவடைந்த குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான முடிவுகளை எதிர்பார்த்து தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

ஏனென்றால் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே மெயின் தேர்வுக்கு தயாராக முடியும் என்பதால் இப்போது தேர்வர்கள் முடிவுகளை எதிர் நோக்கியுள்ளனர். இந்த நிலையில் குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் குரூப் 2க்கான முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நேர்முகத்தேர்வு 2023 ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கிடையில், குரூப் 2 தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும் என்றும் எத்தனை மதிப்பெண் எடுத்தால் மெயின் தேர்வுக்கு படிக்கலாம் என்ற விவரங்களும் வெளியாகியுள்ளது.

கட் ஆஃப் மதிப்பெண்கள்:
  • பொது விண்ணப்பதாரர்: ஆண்களுக்கு – 161; பெண்களுக்கு – 158
  • BC: ஆண்களுக்கு – 159; பெண்களுக்கு -157
  • MBC: ஆண்களுக்கு – 156; பெண்களுக்கு – 154
  • SC: ஆண்களுக்கு – 153 ; பெண்களுக்கு – 150
  • ST: ஆண்களுக்கு – 144 மதிப்பெண்கள்; பெண்களுக்கு – 140

தேர்வு முடிவுகளை சரிபார்க்க:
  • முதலில் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
  • முகப்புப்பக்கத்தில் வலது புறத்தில் உள்ள “WHATS NEW” என்பதை கிளிக் செய்யவும்.
  • TNPSC குரூப் 2 தேர்வு முடிவுக்கான விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
  • ஒரு புதிய பக்கம் திறக்ககும்.
  • தொடர்ந்து தேர்வு முடிவுகளுக்கான இணைப்பை கிளிக் செய்யவும்.
  • அதில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை நிரப்பவும்.
  • பின்னர் submit பொத்தானை கிளிக் செய்யவும்.
  • இப்போது திறக்கும் புதிய பக்கத்தில் pdf கோப்பு வடிவத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!