அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் சேவைகள்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ஹாப்பி நியூஸ் - மேரா ரேஷன் செயலியின் சேவைகள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ஹாப்பி நியூஸ் - மேரா ரேஷன் செயலியின் சேவைகள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் சேவைகள்!

மத்திய அரசின் ‘ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் ஒரு முயற்சியான மேரா ரேஷன் செயலியை பதிவிறக்கம் செய்து அதை பயன்படுத்துவது எப்படி என்பது பற்றியும் இதன் சேவைகளை பற்றியும் சில தகவல்களை இப்பதிவில் காணலாம்.

மேரா ரேஷன்

பொது மக்களின் வசதிக்காக மத்திய அரசு பல புதிய மொபைல் ஆப்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இப்போது அரசாங்கம் ‘மேரா ரேஷன்’ என்ற புதிய ரேஷன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ அமைப்பின் சேவைகளை எளிய முறையில் பயன்படுத்த உதவி செய்கிறது. தொழில்கள் நிமித்தம் மாநிலம் விட்டு வேறு மாநிலங்களுக்கு புலம் பெயரும் தொழிலாளர்களுக்காக மத்திய அரசு துவங்கியது தான் இந்த ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ (ONORC) திட்டம்.

நாட்டில் 9 நாட்கள் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு அறிவிப்பு!

இந்த திட்டம் புதிய இடத்திற்கு இடம்பெயரும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தக்கவைக்க உதவுகிறது. அதாவது இத்திட்டம் மூலம் ஒரு நபர் இந்தியாவின் எந்தவொரு மூலைக்கும் சென்று ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். இப்போது மத்திய அரசின் இந்த சேவைகளை, ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப மேரா ரேஷன் ஆப் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவையைப் பெறுவதற்கான ஆப்ஸ் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் கிடைக்கிறது. இந்த ஆப் மூலம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு செல்லும்போது, PDS நன்மைகளை தடையில்லாமல் பெற முடியும்.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய:

சேவைகள்:

  • முதலில் பயனர்கள் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட்டு இந்த செயலியில் பதிவு செய்யவும்.
  • இப்போது அவரவர் இருப்பிடத்தை தொலைபேசியில் இருந்து இயக்குவதன் மூலம் அருகில் அமைந்துள்ள ரேஷன் கடைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • இந்த ஆப் மூலம், ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு வசதி உள்ள மாநிலங்களையும் பயனர்கள் சரிபார்க்கலாம்
  • பயனாளிகள் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், பரிவர்த்தனை விவரங்களை பெறலாம்
  • ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை பயன்படுத்தி கார்டுதாரரின் தகுதியை சரிபார்க்கலாம்.
  • ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை வழங்கும் அதே முறையில் ஆதார் இணைப்பும் மேற்கொள்ள முடியும்.
  • பயனாளர்கள் தனது மொபைல் எண் மற்றும் கார்டு எண்ணைப் பகிர்வதன் மூலம் ரேஷன் கடை சேவைகளை மதிப்பிடலாம்.
  • அதற்கு கருத்து தெரிவிக்கலாம்
  • நியாயமான விலை என அறியப்படும் உரிமம் பெற்ற கடைக்கு Fps பின்னூட்டம் மூலம் கருத்துக்களுடன் பின்னூட்டம் அளிக்கலாம்.
  • இந்த செயலியில் பயனர்கள் தங்கள் விரல் நுனியில் அனைத்து நன்மைகளையும் பெற முடியும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!