IPL 2022: CSK அணியின் தங்க நட்சத்திரம் ராபின் உத்தப்பா தான் – ரசிகர்கள் கருத்து!

0
IPL 2022: CSK அணியின் தங்க நட்சத்திரம் ராபின் உத்தப்பா தான் - ரசிகர்கள் கருத்து!
IPL 2022: CSK அணியின் தங்க நட்சத்திரம் ராபின் உத்தப்பா தான் - ரசிகர்கள் கருத்து!
IPL 2022: CSK அணியின் தங்க நட்சத்திரம் ராபின் உத்தப்பா தான் – ரசிகர்கள் கருத்து!

கடந்த 2021ம் ஆண்டு IPL தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் நட்சத்திரம் ராபின் உத்தப்பா இந்த அணியின் தங்க நட்சத்திரமாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார்.

ராபின் உத்தப்பா

முன் ஒரு காலத்தில் ‘தி வாக்கிங் அசாசின்’ என்று அழைக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (CSK) வீரர் ராபின் உத்தப்பா இன்னும் பேட்டிங்கில் தனது முரட்டுத்தனத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் இப்போது கிரீஸிலும் அவரது அணுகுமுறையிலும் இன்னும் சமநிலை காணப்படுகிறது. தற்போது 36 வயதான ராபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக, ருதுராஜ் கெய்க்வாட் உட்பட மற்ற வீரர்களும் சற்றே தடுமாறும் வேளையில், அவர் தன்னம்பிக்கை நடையுடன் களமிறங்கினார்.

அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் சேவைகள்!

ஏழு வருட ஐபிஎல்லில் முதன்முறையாக உத்தப்பா 300 ரன்களுக்கும் குறைவாக கடந்த 2019 சீசனில் மட்டும் தான் 282 ரன்களை எடுத்தார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ஓரங்கட்ட 2020 இல் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சொந்தமானார். ஆனால் இப்போதும் ரன்களை பெற சிரமப்பட்ட உத்தப்பா அந்த சீசனை 16.33 சராசரியில் வெறும் 196 ரன்களுடன் முடித்தார். அடுத்த சீசனில் தான் அவர் சென்னை அணிக்கு மாறினார். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டில் அவர் நான்கு IPL போட்டிகளில் மட்டுமே விளையாடினார். மறுபக்கத்தில் உத்தப்பா விளையாடாதபோதும், சென்னை டிரஸ்ஸிங் ரூமில் அவரது இருப்புக்கு மதிப்பளிக்கப்பட்டது.

ஒரு விர்ச்சுவல் ஓப்பனர், திறமையான ஸ்ட்ரைக்கர், சரளமாக ஸ்கோர் செய்பவர் மற்றும் சூழ்நிலையை சிறப்பாகப் படிக்கும் ஒருவராக அறியப்படும் உத்தப்பா எந்த டாப் ஆர்டர் பேட்டரை விடவும் மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புவார். ஆரம்பத்தில் ‘தி வாக்கிங் அசாசின்’ என்று அழைக்கப்பட்டதில் இருந்து உத்தப்பா தன்னை இன்னும் மெருகேற்றிக்கொண்டு முரட்டுத்தனமாக வளர்ந்து இருக்கிறார். நிகழ்காலத்தில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, சென்னை அணியில் ராபின் உத்தப்பா தொடர்ந்து மலர வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!