இந்தியாவில் NEET தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில் 2022ம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மே 20ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு :
இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை மூலம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு முதல் இந்த நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வருடம் நீட் தேர்வு செப்டம்பர் மாதம் 12ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் சுமார் 16 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 18.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப பதிவுகள் மே 20ம் தேதி முடிவடைந்ததை அடுத்து விண்ணப்பத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் தேர்வர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. அத்துடன் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (ஜூலை 11) நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC Group 4 தேர்வர்களின் கவனத்திற்கு – நுழைவுச் சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு!
மேலும், விண்ணப்பதாரர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு எண் மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நடப்பாண்டு 546 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, தஞ்சை ஆகிய முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் நீட் தேர்வு மதியம் 2 மணிக்கு துவங்கி மாலை 5.20 மணி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.