
ராதிகாவிடம் நியாயத்தை கேட்ட எழில், போலீசில் புகார் செய்த கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த வாரம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி காதலிப்பது யார் என்ற உண்மை எழிலிற்கு தெரியாமல் இருக்கும் நிலையில், தற்போது ராதிகா தான் அந்த பெண் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. அதனால் எழில் அவரிடம் கேள்வி கேட்க போலீசில் பிடித்து கொடுப்பது போல அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது சுவாரஸ்யமான காட்சிகளுடன் நம்பர் ஒன் சீரியல் என்ற வரிசையில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கோபி பாக்கியாவை ஏமாற்றி தன்னுடைய கல்லூரி காதலியை 40 வயதில் கரம் பிடிப்பாரா என்பதே கதையாக இருக்கிறது. தமிழகத்தையே இந்த சீரியல் உலுக்கி இருக்கிறது. பாக்கியாவிற்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்த சீரியல் கதையில் கோபியை பற்றிய உண்மை எல்லாம் ராமமூர்த்திக்கும் எழிலிற்கும் தான் தெரியும்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
ஆனால் ராமமூர்த்திக்கு மட்டும் தான் அது ராதிகா தான் என்ற உண்மை தெரியும் அந்த விஷயம் தெரிந்தால் குடும்பமே நிம்மதி இழந்துவிடும் என்பதால் பாக்கியாவிடம் சொல்லாமல் இருக்கிறார். எழிலிற்கு அப்பாவை பற்றி தெரிந்தாலும் அவருக்கு ராதிகா தான் என்ற உண்மை தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் தாத்தா ஏற்கனவே எழிலிடம் உண்மையை சொல்லவந்து சொல்லாமல் இருக்கிறார். தற்போது எழில் படம்வெளியாகி குடும்பத்துடன் சென்றிருக்க பாக்கியா ராதிகாவிடம் அது பற்றி சொல்கிறார்.
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மேலுள்ள எண்களின் அர்த்தம் என்ன? முழு விவரம்!
அதனால் ராதிகா படத்திற்கு வர அங்கே கோபியின் காதலி ராதிகா தான் என்ற உண்மையை ராமமூர்த்தி எழிலிடம் காட்ட போகிறார். உண்மையை தெரிந்து கொண்ட எழில் ராதிகாவிடம் நேரடியாக சென்று சண்டை போட கோபி தன்னுடைய மகன் என்று பார்க்காமல் எழிலை போலீசிடம் பிடித்துக் கொடுக்கிறார். எழில் ஜெயிலில் இருக்க பாக்கியா அவரை பார்க்க செல்கிறார். இதெல்லாம் இனி வரப் போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது. எனவே ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.