இந்த ஸ்மார்ட்போனில் Google Apps இனி இயங்காது – அதிகாரபூர்வ அறிவிப்பு!

0
இந்த ஸ்மார்ட்போனில் Google Apps இனி இயங்காது - அதிகாரபூர்வ அறிவிப்பு!
இந்த ஸ்மார்ட்போனில் Google Apps இனி இயங்காது - அதிகாரபூர்வ அறிவிப்பு!
இந்த ஸ்மார்ட்போனில் Google Apps இனி இயங்காது – அதிகாரபூர்வ அறிவிப்பு!

கூகுள் தனது பயனர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வரும் நிலையில் பழைய வெர்ஷன் மொபைல்போனில் தனது சேவையை நிறுத்தி வருகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கூகுள் செயலிகள்:

முன்னணி நிறுவனமான கூகுள் பயனர்களுக்காக பல்வேறு அப்டேட்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. புதிய தொழில்நுட்பங்களை பயனர்களுக்கு வழங்கும் முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில் பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன் போன்களில் தனது சேவையை நிறுத்தி வருகிறது. கூகுள் வழங்கும் அதிநவீன தொழில்நுட்பங்கள் செயல்படாத வெர்சன்களில் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. எனவே ஆண்ட்ராய்டு பதிப்பு 2.3 வில் கூகுள் மேப்ஸ், யூடியூப் மற்றும் கூகுள் காலண்டர் முதலியன பயன்படுத்த முடியாது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பதவி உயர்வில் நிபந்தனைகள்!

பயனர்கள் கூகுள் வழங்கும் சேவைகளை பெற விரும்பும் பட்சத்தில் அவர்கள் Android 3க்கு மாறுவது மட்டுமே ஒரே வழி. தற்போது Android 12 தொடங்கப்படவுள்ள நிலையில் Android 2.3 என்பது மிகவும் பழைய வெர்ஷன். எனவே இதில் தகவல் கசிவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதால் கூகுள் நிறுவனம் ஜிமெயில், யூடியூப் மற்றும் கூகுளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் Android 3.0 அல்லது அதற்கு மேல் இயங்கும் போனுக்கு தடைகள் இல்லை.

இந்தியாவில் முடிவுக்கு வரும் கொரோனா 2வது அலை? ஒரே நாளில் 24,354 பேருக்கு தொற்று!

Android 2.3.7 மற்றும் அதற்கும் குறைவான யூசர் ஜிமெயிலில் உள்நுழையும்போது USERNAME அல்லது PASSWORD Error பிழை என காண்பிக்கப்படும். எனவே Android 2.3 பயன்படுத்தும் பயனர்கள் தங்களது மொபைல் போனின் வெர்சனை அப்டேட் செய்வதன் மூலம் யூடியூப், ஜிமெயில் மற்றும் கூகுளை பயன்படுத்த முடியும். ஆனால் கூகுள் வழங்கும் சேவைகள் அனைத்தும் பெற Android 2.3 உதவாது என கூகுள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!