நகரம் முழுவதும் தீவிரப்படுத்தப்படும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – ஒமிக்ரான் பரவல் எதிரொலி!

0
நகரம் முழுவதும் தீவிரப்படுத்தப்படும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் - ஒமிக்ரான் பரவல் எதிரொலி!
நகரம் முழுவதும் தீவிரப்படுத்தப்படும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் - ஒமிக்ரான் பரவல் எதிரொலி!
நகரம் முழுவதும் தீவிரப்படுத்தப்படும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – ஒமிக்ரான் பரவல் எதிரொலி!

சீனாவின் ஷாங்காய் நகரில் தற்போது முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சமீபத்திய அறிகுறியற்ற பாதிப்புகளை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேலும் இறுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முழு ஊரடங்கு

கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான கொரோனா தொற்று பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் சீன நகரங்கள் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சீன நிதி மையமான ஷாங்காயில் அதிகப்படியான ஒமிக்ரான் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருவதால் அந்நகரத்தில் கடந்த வாரம் துவங்கி முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல்.5) முதல் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை நீட்டித்து ஷாங்காய் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதாவது ஷாங்காய் நகர அளவிலான ஒரு நாள் தீவிர சோதனைக்கு பிறகு, புதிய பாதிப்புகள் 13,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!

ஏற்கனவே ஷாங்காயில் பொருளாதார சீர்குலைவுகளைக் குறைப்பதை நோக்கமாக கொண்ட அதிகாரிகள் ஒரு சிறிய அணுகுமுறையை முதலில் எடுத்த பிறகு, கடந்த வாரத்தில் இரண்டு கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இப்போது லாக்டவுனின் முதல் கட்ட நடவடிக்கையின் போது ஷாங்காய் நகரின் மேற்கு மாவட்டங்களில் ஊரடங்கு முடிவடையும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை இக்கட்டுப்பாடுகள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் 4 அன்று ஷாங்காயில் 13,086 புதிய அறிகுறியற்ற கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதனை கருத்தில் கொண்டு ஷாங்காய் நகர போக்குவரத்து நெட்வொர்க்குகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர். மேலும் சுரங்கப்பாதைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இப்போது, ஷாங்காயின் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து கவலைகளை வெளிப்படுத்தியதால், இந்த பிரச்சனைகளை தீர்க்க அரசியல் கட்சிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஷாங்காய் நகரில் வெகுஜன பரிசோதனைகளுக்காக சீன அரசாங்கம், ஆயிரக்கணக்கான மருத்துவ பணியாளர்களை ஷாங்காய்க்கு அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here