தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இலவச மாணவர் சேர்க்கை – RTE விண்ணப்பிப்பது எப்படி?

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இலவச மாணவர் சேர்க்கை - RTE விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இலவச மாணவர் சேர்க்கை - RTE விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இலவச மாணவர் சேர்க்கை – RTE விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு வழங்கி வருகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விபரங்களை பற்றி பார்ப்போம்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது தனியார் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் நலிவடைந்தோர்களின் குழந்தைகளுக்கான LKG அல்லது 1ம் வகுப்புகளில் 25% இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 22 முதல் மே 18 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ExamsDaily Mobile App Download

மேலும் இது தொடர்பான அறிவிப்புகள் அந்தந்த பள்ளிகள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலமாகவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், வட்டார அலுவலகத்துக்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். இதற்கு 1.8.2018 முதல் 31.7.2019 வரை பிறந்த குழந்தைகள் LKG க்கு விண்ணப்பிக்க முடியும். இதையடுத்து 1.8.2016 முதல் 31.7.2017 வரை பிறந்த குழந்தைகள் 1ம் வகுப்புக்கும் விண்ணப்பிக்க முடியும். அத்துடன் மாணவரின் புகைப்படம் 100 kb அளவு கொண்டதாக jpg வடிவில் இருக்க வேண்டும்.

தனது மகன் அர்ஷுடன் ஆலியா, சஞ்சீவ் முதல்முறையாக வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

1. முதலில் விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர்கள் http://www.rte.tnschool.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

2. தங்கள் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், முகவரி அட்டை, பெற்றோர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டியதிருக்கும்.

3. இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட ஆவணத்தை அப்ளை செய்த பள்ளிக்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது போன்று 5 பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!