தனது மகன் அர்ஷுடன் ஆலியா, சஞ்சீவ் முதல்முறையாக வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

0
தனது மகன் அர்ஷுடன் ஆலியா, சஞ்சீவ் முதல்முறையாக வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
தனது மகன் அர்ஷுடன் ஆலியா, சஞ்சீவ் முதல்முறையாக வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
தனது மகன் அர்ஷுடன் ஆலியா, சஞ்சீவ் முதல்முறையாக வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

ஆலியாவிற்கு தற்போது தான் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது குழந்தையுடன் இருக்கும் அழகிய தருணங்களை ஒரு வீடியோவாக யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆலியா மற்றும் சஞ்சீவ்:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமானவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இந்த தொடரில் நடித்து கொண்டிருந்த போதே இருவரும் காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பிறந்த பிறகு ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடிக்க ஒப்பந்தமானார்.

உண்மையை ராதிகாவிடம் கூறப்போவதாக மிரட்டும் ராமமூர்த்தி – கொலை செய்ய நினைக்கும் கோபி!

ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் நிலையில் ஆலியா மானசா சீரியலை விட்டு விலகுவார் என எதிர்ப்பார்த்த சமயத்தில் 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதும் கூட தொடர்ந்து ராஜா ராணி தொடரில் நடித்து வந்தார். பின்பு பிரசவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகினார். ஐலா பாப்பாவின் பிறந்தநாளான மார்ச் 20 அன்று தான் ஆலியாவிற்கு வளைகாப்பை நடத்தினர்.

ExamsDaily Mobile App Download

தற்போது ஆலியாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் அழகிய தருணங்களை அவ்வப்போது சமூக வலை பக்கங்களில் பதிவிட்டபடி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் முதன் முறையாக ஆலியா ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி தனது மகனின் புகைப்படத்தை சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது குழந்தையுடன் ஆலியா மற்றும் சஞ்சீவ் நேரத்தை செலவிடும்படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சஞ்சீவ் அர்ஷ்க்கு முத்தம் கொடுக்கிறார். அப்போது ஆலியா குழந்தைக்கு முத்தம் கொடுக்காதீர்கள், வலிக்கும் என கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here