தமிழக பட்ஜெட்டில் காமராஜர் பெயரில் கல்லூரிகளுக்கான புதிய திட்டம் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!

0
தமிழக பட்ஜெட்டில் காமராஜர் பெயரில் கல்லூரிகளுக்கான புதிய திட்டம் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!
தமிழக பட்ஜெட்டில் காமராஜர் பெயரில் கல்லூரிகளுக்கான புதிய திட்டம் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!
தமிழக பட்ஜெட்டில் காமராஜர் பெயரில் கல்லூரிகளுக்கான புதிய திட்டம் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!

தமிழகத்தில் தி மு க அரசின் பட்ஜெட் கடந்த 18 ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மக்களுக்கு பல நன்மைகள் கொண்ட திட்டங்கள் இடம் பெற்று இருந்தது. இந்நிலையில் தமிழக கல்லூரிகளுக்கான ஒரு திட்டமும் அமல்படுத்த உள்ளது. மேலும் இந்த திட்டத்துக்கு கர்மவீரர் காமராஜரின் பெயரை வைக்க இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் அறிவித்து உள்ளனர்.

கல்லூரிகளுக்கான புதிய திட்டம்:

தமிழகத்தில் சென்ற ஆண்டு கொரோனா தொற்றின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்த நேரத்தில் ஆட்சிக்கு வந்தது திராவிட முன்னேற்ற கழகம். முதல்வர் முக ஸ்டாலின் தற்போது கொரோனாவை தமிழகத்தில் கட்டுப்படுத்தி மீண்டும் நோய் பரவல் இல்லாத மாநிலமாக மாற்றினார். மேலும் அதனை தொடர்ந்து மக்களுக்கு பல நன்மைகளை செய்து வந்த வண்ணம் உள்ளார். மேலும் இரு வருடத்திற்கு பின்னர் மீண்டும் சென்ற ஆண்டு இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத் தேர்வுகள் நடக்கும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை கூறியதால் அதற்கான தேதிகள் வெளிவந்து மாணவர்கள் முனைப்புடன் படித்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து இந்த பட்ஜெட் குறித்த விவாதம் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. அந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்விகள் கேட்டு வருகின்றனர். இந்த கேள்விகள் அனைத்திற்கும் சலிக்காமல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் பதிலுரை கூறி வருகிறார்.

சன் டிவி சுந்தரி சீரியல் நடிகை கருப்பழகி கேப்ரில்லா யார் தெரியுமா? – வைரலாகும் பதிவு!

அதனைத் தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் தமிழக கல்லூரிகளுக்கு ஒரு திட்டம் புதிதாக செய்ய இருப்பதாகவும், மேலும் அந்த திட்டத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை வைக்க இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். அந்த திட்டம் என்னவென்றால்,பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டு திட்டம் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். இதன்மூலம் கல்லூரி கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு, தமிழகம் முழுவதும் கல்லூரிகள் மேம்படுத்தப்படும். இதற்கு காமராஜர் பெயரை சூட்ட முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். ரூ.40 கோடியில் 6 மாடிகளுடன் நவீன மாணவர் விடுதி சென்னையில் கட்டப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!