கடை திறப்பு விழாவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்களை சுற்றிவளைத்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

0
கடை திறப்பு விழாவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்களை சுற்றிவளைத்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ!
கடை திறப்பு விழாவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்களை சுற்றிவளைத்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ!
கடை திறப்பு விழாவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்களை சுற்றிவளைத்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மருமகளான மீனா, முல்லை மற்றும் தனம் மூவரும் கடை திறப்பு விழாவிற்கு சென்ற போது ரசிகர்கள் மூவரையும் சுற்றிவளைத்து செல்பி எடுத்துக் கொள்ளும் படியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் ரசிகர்களின் மத்தியில் கூடிய விரைவில் பிரபலமாகி விடுகின்றனர். சீரியல்கள் மூலமாகவே திரைப்பட வாய்ப்புகளும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 5 இடத்தையும் பிடித்து இருப்பது நிச்சயமாக விஜய் டிவி தொலைக்காட்சி சீரியல்கள் தான்.

கொந்தளித்த ‘குக் வித் கோமாளி’ வெங்கடேஷ் பட் – மீம் கிரியேட்டர்ஸ் மீது காட்டம்! வைரலாகும் பதிவு!

அந்த அளவுக்கு இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களால் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகிறது. அதிலும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கென்றே தனியாக ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது. ஷூட்டிங் போக மீத நேரம் முழுவதும் இந்த நடிகர்கள் நடிகைகள் அவ்வப்போது அரட்டை அடித்துக்கொண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து கொண்டு மகிழ்ந்து வருகின்றனர். ஷூட்டிங்கில் எடுக்கப்படும் புகைப்படங்களையும் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது பாண்டியன் ஸ்டோர் தொடரில் மருமகளாக இருந்து வரும் தனம், முல்லை மற்றும் மீனா மூவருமே ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்று உள்ளனர். இவர்கள் மூவரையும் பார்க்கவே லட்சக்கணக்கான ரசிகர்கள் அந்த கடை திறப்பு விழாவிற்கு வந்துள்ளனர். ஒரு திருவிழா கூட்டம் போல அந்த பகுதி முழுவதும் காட்சியளிக்கிறது. கூட்ட நெரிசலில் மூவரும் சென்று ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர். கூட்டநெரிசலில் மூவரும் சிக்கிக்கொண்ட வீடியோக்களையும் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், எங்களுக்கு தொடர்ந்து இதுபோன்ற ஆதரவை கொடுத்துக் கொண்டே இருங்கள் எனவும் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!