கொந்தளித்த ‘குக் வித் கோமாளி’ வெங்கடேஷ் பட் – மீம் கிரியேட்டர்ஸ் மீது காட்டம்! வைரலாகும் பதிவு!

0
கொந்தளித்த 'குக் வித் கோமாளி' வெங்கடேஷ் பட் - மீம் கிரியேட்டர்ஸ் மீது காட்டம்! வைரலாகும் பதிவு!
கொந்தளித்த 'குக் வித் கோமாளி' வெங்கடேஷ் பட் - மீம் கிரியேட்டர்ஸ் மீது காட்டம்! வைரலாகும் பதிவு!
கொந்தளித்த ‘குக் வித் கோமாளி’ வெங்கடேஷ் பட் – மீம் கிரியேட்டர்ஸ் மீது காட்டம்! வைரலாகும் பதிவு!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விமர்சித்து ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட் செய்து ஷேர் செய்து கொண்டிருக்கின்றனர். இதனை கண்டு வெங்கடேஷ் பட் கொந்தளித்து ஒரு பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் என அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் எக்கச்சக்கமான ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற நிகழ்ச்சி என்றால் அது நிச்சயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். தற்போது இந்த நிகழ்ச்சியை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட் செய்து ஷேர் செய்து வருகின்றனர். நோயாளிகள் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து தங்களது கஷ்டங்களை மறந்து அந்த நோயிலிருந்து விடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் பயனடைந்தவர்கள் குறித்து வெங்கடேஷ் கடந்த வாரம் நிகழ்ச்சியின் போது தெரிவித்திருந்தார். அதாவது கடந்த 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த ஒரு பெண் இதற்கு மேலும் குழந்தை பிறக்காது என நினைத்து தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்திருக்கிறார். அனைத்து கஷ்டங்களையும் மறந்து நிம்மதி அடைந்து தற்போது குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது தோழிகளுக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியைப் பார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

பல வருடம் கழித்து மீண்டும் சீரியலில் அறிமுகமாகும் ‘திருமதி செல்வம்’ அர்ச்சனா – ரசிகர்கள் உற்சாகம்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் தான் ஒரு பெண் குழந்தை பெற்று நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என வெங்கடேஷ் பட் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்தாலே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என கண்டபடி மீம்ஸ் கிரியேட் செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் வெங்கடேஷ் பட் தற்போது கொந்தளித்துள்ளார். இந்த உலகில் மனிதநேயம் என்கிற ஒன்று கிடையவே கிடையாதா? உயிரை சுமக்கும் பெண்ணிற்காக கேட்கிறேன் தயவு செய்து இது போன்ற மீம்களை ஷேர் செய்ய வேண்டாம். உங்களின் தரத்தை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள் எனக்கூறி வெங்கடேஷ் பட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here