
கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு நேர்ந்த சோகம் – மகன் உயிரிழப்பு! ரசிகர்கள் ஆறுதல்!
கால்பந்து விளையாட்டு உலகில் நம்பர் ஒன் வீரராக வலம் வந்து கொண்டிருக்கும் போர்ச்சுகீஸை சேர்ந்த கிறிஸ்டியானா ரொனால்டோ தனது மகனின் இறப்பு குறித்த இரங்கல் செய்தியை சமூக வலைதளத்தில் பதிவிட, ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டியானா ரொனால்டோ
உலகளவில் கால்பந்து என்ற விளையாட்டை பற்றி பேசினால் கிறிஸ்டியானா ரொனால்டோவின் பெயர் அடிபடாமல் இருந்ததில்லை. சுமார் 18 வயதில் கால்பந்து விளையாட்டில் தடம் பதித்த கிறிஸ்டியானா ரொனால்டோ செய்த சாதனைகள் ஏராளம். விளையாட்டு வாழ்க்கையில் ஏகப்பட்ட வெற்றிகளை குவித்துள்ள இவருக்கு காதல் வாழ்க்கையும் சிறப்பாக அமைந்திருந்தது. தற்போது 37 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் அவரது பார்ட்னர் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் ஆகியோருக்கு 4 குழந்தைகள் இருக்கிறது. இந்த நிலையில், இந்த ஜோடிக்கு 5வதாக பிறந்த ஆண் குழந்தை இறந்து போனதாக ரொனால்டோ அறிவித்துள்ளார்.
TN Job “FB
Group” Join Now
கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரு சமூக ஊடக பதிவில், இரட்டை குழந்தைகளை எதிர்பார்ப்பதாக ரொனால்டோ அறிவித்திருந்தார். தொடர்ந்து ரொனால்டோவின் காதலி ஜார்ஜினாவுக்கு சமீபத்தில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக மான்செஸ்டர் யுனைடெட்டின் ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட பதிவில் அவர்கள் உறுதிப்படுத்தினார்கள். இதில் உடல் நலக்குறைவு காரணமாக தற்போது ஆண் குழந்தை உயிரிழந்ததாக ரொனால்டோ தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இரட்டை கருவை சுமந்து கொண்டிருக்கும் முல்லை – ஆச்சரியத்தில் கதிர்! குஷியில் ரசிகர்கள்!
இது குறித்த இன்ஸ்டாகிராம் பதிவில், ‘ஆழ்ந்த சோகத்துடன் எங்களது ஆண் குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கிறேன். இந்த வலியை அனைத்து பெற்றோர்களாலும் உணர முடியும். பெண் குழந்தை தான் தற்போது எங்களுக்கு வலிமையையும், ஆறுதலையும் கொடுக்கிறது. எனது குழந்தையை காப்பாற்ற முயன்ற மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்த இழப்பினால் கஷ்டத்தில் இருக்கும் எங்களது தனிமையை மதிக்க வேண்டுகிறேன். ஆண் குழந்தை எங்களின் தேவதை. அதன் மீது எப்போதும் அன்பு செலுத்துவோம்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார் ரொனால்டோ.