தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் – தொடரும் முறைகேடுகள்! 2 லட்சம் போலி அட்டைகள் பறிமுதல்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் - தொடரும் முறைகேடுகள்! 2 லட்சம் போலி அட்டைகள் பறிமுதல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் - தொடரும் முறைகேடுகள்! 2 லட்சம் போலி அட்டைகள் பறிமுதல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் – தொடரும் முறைகேடுகள்! 2 லட்சம் போலி அட்டைகள் பறிமுதல்!

ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், போலியான ரேஷன் கார்டு வைத்து ரேஷன் பொருட்களை வாங்கி கொண்டிருந்தவர்களின் ரேஷன் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைகள்

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் மலிவு விலையில் கிடைக்கும் ரேஷன் பொருட்களை வாங்கி பயன் பெற்று வருகின்றனர். இது மட்டுமல்லாமல் அனைவருக்கும் சமமாக ரேஷன் பொருட்கள் சென்று சேருகிறதா எனவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை பணிகள் குறித்தான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு பேசினார்.

TNPSC ரூ.75,900 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 42 காலிப்பணியிடங்கள்!

அதாவது, இது வரை தமிழகத்தில் 11 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளத என்றும் தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். கூடுதலாக, இறந்த12 லட்சம் குடும்பத்தாரர்களின் பெயர்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் மட்டுமே 6,976 ரேஷன் கடைகள் வாடகை கடைகளில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் சொந்த கட்டிடத்தில் ரேஷன் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

ரேஷன் கடைகளில் அவ்வப்போது முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார் வந்து கொண்டிருக்கிறது. மக்களின் குறைகளை கேட்டறிய அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பெட்டி வைக்கப்படும். அந்த புகாரை மாவட்ட ஆட்சியர் மட்டுமே திறந்து பார்க்கும் படியாக அமைக்கப்படவுள்ளது. மேலும், மக்களுக்கு ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு தரமற்ற பொருட்களை அனுப்பும் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ரேஷன் கடைகளுக்கு வரும் பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருக்கிறதா எனவும் மாவட்ட ஆட்சியர் சோதிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!