வக்பு வாரியத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு – நவ.13ம் தேதி தேர்வு!

0
வக்பு வாரியத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு - நவ.13ம் தேதி தேர்வு!
வக்பு வாரியத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு - நவ.13ம் தேதி தேர்வு!
வக்பு வாரியத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு – நவ.13ம் தேதி தேர்வு!

வக்பு வாரியத்தில் காலியாக உள்ள 27 இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு நவ-13 ம் தேதி நடைபெறும் என்று வக்பு வாரிய முதன்மைச் செயல் அலுவலர் பரிதா பானு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இளநிலை உதவியாளர் தேர்வு:

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு தான் வரும் வக்பு வாரியம் ஆகும். இந்த வக்பு வாரியத்தில் காலியாக உள்ள 27 பணியிடங்களை நிரப்பும் விதமாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இத்தேர்விற்கு கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு துறையில் இளநிலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போருக்கு வயது வரம்பு 21 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. மேலும் மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.wakfboard.com என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தினை தெளிவாக பூர்த்தி செய்து முதன்மை செயல் அலுவலர், வக்பு வாரிய எண் 1, ஜாபர் சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை 600 001 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு பின்னர் மதிப்பெண் அடிப்படையில் தெரிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் சென்று அடைய கடைசி தேதியாக ஆகஸ்ட் 27ம் தேதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் எழுத்துத் தேர்வானது அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இத்தகைய தேர்வு தேதியானது மாறுதலுக்குட்பட்டது என்றும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் நாளை 17ம் தேதி நடக்கவிருந்த தேர்வானது கொரோனா காரணமாக நவ-13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TCS, Infosys நிறுவன ஊழியர்களுக்கு புதிய உத்தரவு – மின் பற்றாக்குறை எதிரொலி!

மேலும் இத்தேர்வு சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று வக்பு வாரிய முதன்மைச் செயல் அலுவலர் பரிதா பானு அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நபர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் இதுகுறித்த தகவல் விண்ணப்பதாரரின் செல்போன் எண்ணுக்கும் அனுப்பப்படும். அதனை தொடர்ந்து விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட விவரமும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும் என்று தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் எம்.அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!