EPFO பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. வந்தாச்சு புது அப்டேட் – இனி ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்கலாம்!

0
EPFO பயனர்களுக்கு வந்தாச்சு புது அப்டேட்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சிகிச்சைக்காக பணம் எடுக்கும் வரம்பை ரூ.1 லட்சமாக உயர்த்தி இருக்கிறது.

வெளியான அறிவிப்பு

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒரு நல்ல செய்தியை தனது பயனர்களுக்கு வெளியிட்டுள்ளது. அதாவது பயனர்கள் தங்களுடைய கணக்கில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம் என தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த வரம்பு ரூ. 50 ஆயிரமாக இருந்தது. தற்போது இது இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வுக்கு ரெடியா தேர்வர்களே? – முக்கிய தகவல்!

இது குறித்து , EPFO படிவம் 31 இன் 68J இன் கீழ் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் காசநோய், பக்கவாதம், புற்றுநோய், இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெற இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இந்த புதிய விதி மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!