தமிழகம் முழுவதும் நேற்று 1.48 லட்சம் பயணிகள் பயணம் – போக்குவரத்து துறை தகவல்!

0
தமிழகம் முழுவதும் நேற்று 1.48 லட்சம் பயணிகள் பயணம் - போக்குவரத்து துறை தகவல்!

தமிழக போக்குவரத்து துறை ஆனது பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்த நிலையில் நேற்று ஒரு நாளில் பயணத்தை மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை வெளியாகி உள்ளது.

சிறப்பு பேருந்துகள்:

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதால் அன்று மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக மற்றும் தேர்தல் காரணமாகவும் பயணிகள் அதிக அளவில் இந்த வாரத்தில் பயணத்தை மேற்கொள்ள ஆயத்தம் ஆவார்கள்.

NARCL-ல் Managing Director காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

இதனை முன்னிட்டு தமிழக போக்குவரத்து துறை ஆனது மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 1.48 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்காக வழக்கமான 2092 பேருந்துகளுடன், 807 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு மொத்தம் நேற்று முழுவதும் 2899 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!