TNPSC 626 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
TNPSC 626 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC 626 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC 626 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய 626 காலிப் பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற பணியிடங்களுக்கு தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கூடுதலாக பொறியாளர், குழந்தை பாதுகாப்பு அதிகாரி போன்ற பணியிடங்களுக்கும் டிஎன்பிஎஸ்சி மூலம் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் தானியங்கிப் பொறியாளர்(மோட்டார் வாகன பராமரிப்புத் துறை) 4 காலிப் பணியிடங்களும் அதற்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத சம்பளம் ரூ.56,100 முதல் 2,05,700 கொடுக்கப்படும்.

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமரின் அதிரடி முடிவு என்ன? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

இளநிலை மின் ஆய்வாளர் பணிக்கு 8 காலியிடங்களும், உதவி பொறியாளர் பணிக்கு 66 பணியிடங்களும்,உதவி பொறியாளர் 33 பணியிடங்களும், இயக்குநர்(தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை) 18 காலியிடங்களும், உதவி பொறியாளர்(நீர்வளத் துறை) பணியிடங்களுக்கு 1 பணியாளரும் மற்றும் உதவிபொறியாளர் (பொதுப்பணித் துறை) – 1+ 307 காலியிடங்களும்,முதலாள் – 07 காலியிடங்களும், தொழில்நுட்ப உதவியாளர் 11 காலியிடங்களும், உதவி பொறியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) 93 பணியிடங்களும், உதவி பொறியாளர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) 64 பணியிடங்களும், உதவி பொறியாளர் (சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்)13 காலியிடங்களும் உள்ளன. இதற்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளம் ரூ. 37,700 முதல் 1,38,500 கொடுக்கப்படும்.

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வரம்பு 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.எஸ்சி, எஸ்டி,எம் பி சி, பிசி, அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கும் வயது வரம்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணம் ரூ.200 ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஒருமுறை பதிவு செய்யாதவர்கள், ரூ.150 செலுத்தி அடிப்படை விவரங்களை இணையவழி நிரந்தரப் பதிவு மூலம் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டண விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி 03.05.22 ஆகும். தேர்வு 26.06.22 அன்று காலை முதல் தாள் மற்றும் மதியம் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும். ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்தான விபரங்களை காண https://www.tnpsc.gov.in/Document/english/2022_10_CESE%20_eng.pdf என்ற இணைப்பை தேர்வு செய்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!