இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமரின் அதிரடி முடிவு என்ன? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

0
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - பிரதமரின் அதிரடி முடிவு என்ன? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - பிரதமரின் அதிரடி முடிவு என்ன? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமரின் அதிரடி முடிவு என்ன? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுத்தக் கூடும் எனக் கூறப்படுகிறது.

முழு ஊரடங்கு அமல்:

கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் பரவி மீண்டும் மக்களை அச்சுறுத்தி வந்தது. பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளால் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே அஸ்திரம் தடுப்பூசி மட்டுமே என்ற நிலை இருப்பதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பூஸ்டர் டோஸும் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.

கல்லூரிகள் & பல்கலைக்கழகங்களுக்கு 10 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

தொடர்ந்து கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன், நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. டெல்லியில், கடந்த ஒரு வாரத்தில், கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.5 சதவீதத்தில் இருந்து 2.39 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பும் உயர்ந்துள்ளது. நாட்டின் கொரோனா தினசரி பாதிப்பு, ஆயிரத்திற்கு கீழே பதிவாகி வந்த நிலையில், தற்போது 1,000 ஐ தாண்டி உள்ளது.

முன்னதாக ஒமைக்ரான் தொற்றின் புதிய திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது, டெல்லி உட்பட சில மாநிலங்களில், கொரோனா பரவல் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே நாளை கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து இந்தியாவில், ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை உருவாகும் என ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போதே கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here