தமிழகத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு!

0
தமிழகத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் கவனத்திற்கு!
தமிழகத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் கவனத்திற்கு!
தமிழகத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு!

மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக பாதுகாப்பு அலுவலர், (Protection Officer ) மற்றும் கணினி இயக்குபவர் -1 பணியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், இந்த பணியிடங்களுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் பணியிடங்கள் குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு:

மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர், (Protection Officer ) மற்றும் கணினி இயக்குபவர் -1 பணியில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி, பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான விண்ணப்பங்களை www.mayiladuthurai.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அல்லது மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

1.பணியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர்(1) (ஒப்பந்த அடிப்படையில்)

  • விண்ணப்பதாரர் தகுதி : MA Sociology / Psychology/ Social Work with Computer Knowledge முறையிலான கல்வி முடித்திருக்க வேண்டும்.
  • தொகுப்பூதியம்: மாதம் ரூ.30,000/- .
  • வயது வரம்பு : குறைந்தபட்ச வயது – 22, அதிகபட்ச வயது – 35, SC/ST-35 வயது , MBC/BC-32 வயது, முற்பட்ட வகுப்பினர்-30

தமிழகத்தில் உச்சத்தை தொடும் கொரோனா பரவல் – மாஸ்க் அணியும்படி எச்சரிக்கை!

2.பணியின் பெயர்: கணினி இயக்குபவர் -1 (ஒப்பந்த அடிப்படையில்)

  • விண்ணப்பதாரர் தகுதி : தமிழ் மற்றும் ஆங்கிலம் (SENIOR GRADE) முடித்திருக்க வேண்டும். கணினியிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்
  • தொகுப்பூதியம்: மாதம் ரூ.12,000/-

மேலும் 2 பணியிடங்களுக்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்களை “மாவட்ட சமூக நல அலுவலகம், Door.No./3/264 குமரன் தெரு, சீனிவாசபுரம், மயிலாடுதுறை 609 001”;என்ற முகவரிக்கு விளம்பரம் செய்த 15 நாட்களுக்குள் அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04364-212429 என்ற எண்களுக்கு தொடர்புக்கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!