தமிழகத்தில் உச்சத்தை தொடும் கொரோனா பரவல் – மாஸ்க் அணியும்படி எச்சரிக்கை!

0
தமிழகத்தில் உச்சத்தை தொடும் கொரோனா பரவல் - மாஸ்க் அணியும்படி எச்சரிக்கை!
தமிழகத்தில் உச்சத்தை தொடும் கொரோனா பரவல் - மாஸ்க் அணியும்படி எச்சரிக்கை!
தமிழகத்தில் உச்சத்தை தொடும் கொரோனா பரவல் – மாஸ்க் அணியும்படி எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா:

தமிழகத்தில் கொரோனா நான்காம் அலை தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. நாள் ஒன்றிற்கு மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் சென்னையில் தான் தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் சார்ந்த பள்ளி கல்வி மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிந்து தான் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரப்படுத்தப்படுகிறது. கட்டாயமாக பொது மக்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு தமிழகத்தில் 19% முதல் 20% வரைக்கும் கொரோனா தொற்று இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சிகளில் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் பேட்டி!

மேலும், பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், பொது இடங்களில் முடிந்த வரைக்கும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் கிருமிநாசினி கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!