தமிழக அரசில் ரூ.15000 மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசில் ரூ.15000 மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசில் ரூ.15000 மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசில் ரூ.15000 மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதனை கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டு உள்ளார்.

அரசு வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் பரவல் அதிகரித்து வந்த நிலையில் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். மேலும் படித்து முடித்த இளைஞர்களும் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் சென்ற வருடம் இறுதியில் கொரோனா தொற்று பரவல் குறைந்த காரணத்தால் ஊரடங்கில் தளர்வுகளை தெரிவித்து இருந்தது தமிழக அரசு. மேலும் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் பழைய படி திறக்கப் பட்டு தமிழகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. மேலும் தமிழக அரசு கொரோனா காலத்தில் தெரிவிக்காமல் இருந்த வேலைவாய்ப்புகளை சமீபத்தில் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது tnpsc குரூப் 2, 2A ஆகிய தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்து அதற்கான வேலைகளையும் செய்து வருகிறது. அடுத்ததாக குரூப் 4 தேர்வுக்கான தேதியையும், ஆசிரியர் தகுதி தேர்வையும் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? அரசின் முடிவு என்ன!

இந்நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதனை கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் ஒரு செய்தி தொகுப்பாக வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்ட அளவில் கூடுதலாக 6 நபர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு ஆலோசகர் (பெண்கள் மட்டும்) பணியிடங்கள் 4 உள்ளது. முதுகலை சமூகப்பணி- சட்டப்படிப்பு படித்தவர்கள், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை மற்றும் மறுவாழ்வு அளித்தல் சம்பந்தமான பணியில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் மேலும் அதற்கு மாத ஊதியமாக ரூபாய் 15 ஆயிரம் எனவும் அறிவித்து உள்ளனர்.

தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000/-

அதனை தொடர்ந்து, பாதுகாவலர் (பெண்கள் மட்டும்) ஒரு காலிப்பணியிடம் உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் என்றும், பல்நோக்கு உதவியாளர் (மகளிர் மட்டும்) ஒரு காலிப் பணியிடம் உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்து, மைய பராமரிப்பு வேலை மற்றும் சமையல் வேலை தெரிந்த, 3 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6,400 வழங்கப்படும். மூன்று பணியிடங்களும் தற்காலிகமானது. பணியாளர்கள் பகல், இரவு என சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படுவார்கள். தகுதி வாய்ந்த நபர்கள், இந்த அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து 10 தினங்களுக்குள், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!