தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ 50,400 வரை சம்பளம்!

5

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ 50,400 வரை சம்பளம்!

கன்னியாகுமரி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ 50,400 வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் வேலைவாய்ப்பு;

கன்னியாகுமரி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பதிவுரு எழுத்தர் (1) , அலுவலக உதவியாளர் (3) , இரவு காவலர் (1) ஆகிய பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது. அறிவிப்பின்படி மொத்தம் 5 காலிப் பணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒவ்வொரு பணிக்கும் கல்வித் தகுதி மாறுபடும். அதாவது பதிவுரு எழுத்தர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இரவு காவலர் பணிக்கு தமிழில் நன்கு எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பதிவுரு எழுத்தர் , அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். இரவு காவலர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

இதையடுத்து பதிவுரு எழுத்தர் , அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது. மேலும் பதிவுரு எழுத்தர் பணிக்கு ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை என்றும், அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை என்றும், இரவு காவலர் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும். இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இதர படிகளும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி தொடர்பான தகவல்கள் பற்றி அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 29.07.2022 ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!