சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிவாய்ப்பு – பெண்களுக்கு நல்ல சான்ஸ்!

0

சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிவாய்ப்பு – பெண்களுக்கு நல்ல சான்ஸ்!

சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒருங்கிணைந்த சேவை மையப் பணிகள் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

பணி வாய்ப்பு:

சென்னை மாவட்ட ஆட்சியர் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் சார்பில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் சேவை வழங்கும் நோக்கில் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இவற்றில் பணிபுரிவதற்கு தொகுப்பூரிய /ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள மூன்று வழக்கு பணியாளர்கள், ஒரு பாதுகாப்பாளர், இரண்டு பன்முக உதவியாளர் காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வழக்குப் பணியாளர் காலி இடங்களுக்கு சமூக பணியில் இளங்கலை பட்டமும், குறைந்தபட்ச ஒரு வருடம் முன் அனுபவம் கொண்ட 35 வயதுக்குட்பட்ட உள்ளூரை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

எகிறியது அரிசியின் விலை – தொடரும் பொதுமக்கள் போராட்டம்!

பாதுகாப்பாளர் பணிக்கு அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றிய முன்அனுபவம் கொண்ட உள்ளூரை சார்ந்தவராக இருக்க வேண்டும். பன்முக உதவியாளர் பணிக்கு ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த முன் அனுபவம் கொண்ட சமையல் தெரிந்த பெண்களாக இருக்க வேண்டும். இப்பணிகளுக்கு ரூபாய் 6400 முதல் ரூபாய் 15,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள பெண்கள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம், செய்து மார்ச் 13ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக அல்லது மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!