இஸ்ரோ செய்த சாதனை, எலான் மஸ்க் போட்ட ஒரு ட்வீட் – இந்தியாவை திரும்பி பார்க்கும் உலக நாடுகள்!

0
இஸ்ரோ செய்த சாதனை, எலான் மஸ்க் போட்ட ஒரு ட்வீட் - இந்தியாவை திரும்பி பார்க்கும் உலக நாடுகள்!
இஸ்ரோ செய்த சாதனை, எலான் மஸ்க் போட்ட ஒரு ட்வீட் - இந்தியாவை திரும்பி பார்க்கும் உலக நாடுகள்!
இஸ்ரோ செய்த சாதனை, எலான் மஸ்க் போட்ட ஒரு ட்வீட் – இந்தியாவை திரும்பி பார்க்கும் உலக நாடுகள்!

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும் திட்டத்தில் இஸ்ரோ, நாசா என பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் மும்முரமாக இறங்கி உள்ளன. இந்நிலையில் இஸ்ரோ அதில் புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. இதற்காக உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா CEO மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் மனிதன்:

உலகின் அனைத்து வளங்களையும் ஆண்டு அனுபவித்து முடித்த மனிதன், தற்போது விண்வெளி நோக்கி தனது பயணத்தை துவக்கி இருக்கிறான். ஆம், உலகின் பெரும் பணக்காரர்கள் ஆன எலான் மஸ்க், ஜெப் பெசோஸ் என பலரது ஆர்வமும் அதனை நோக்கி தான் உள்ளது. சமீபத்தில் விண்வெளி துறையில் கவனத்தை செலுத்த அமேசான் CEO பதவியில் இருந்து உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன ஜெப் பெசோஸ் விலகியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாத இறுதியில் விண்வெளிக்கு பறக்க உள்ளார். மறுபுறம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஆட்டோமொபைல், விண்வெளி என பல துறைகளிலும் தனது கவனத்தை செலுத்தி உள்ளார்.

அது ஆங்கிலேயர் காலம், தேசத்துரோக சட்டத்தை நீக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

இந்தியாவில் இஸ்ரோ நிறுவனமும் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கான திட்டத்தை கையில் எடுத்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. ககன்யான் என பெயர் சூட்டப்பட்ட இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும் என்ஜினை தயாரித்த விஞ்ஞானிகள் இன்று அதற்கான சோதனை ஓட்டத்தை நடத்தினர். தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் சுமார் 240 விநாடிகளுக்கு என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதற்காக பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், தனது ட்விட்டர் பக்கத்தில் “வாழ்த்துக்கள்!” என இஸ்ரோவின் வெற்றியை குறிப்பிட்டு, இந்திய கொடியுடன் பதிவிட்டு உள்ளார். மனிதர்களை பல கிரகங்களில் வாழ தகுதியுள்ளவர்களாக மாற்றுவதை நோக்கமாக கொண்ட மஸ்க் 2002 இல் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை நிறுவினார்.

Elon Musk Tweet
Elon Musk Tweet

இஸ்ரோ அவரது நிறுவனத்தின் போட்டியாளராக இருந்தபோதிலும், குறைந்த செலவில் இலக்கை அடைய இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளை எலான் மஸ்க் அடிக்கடி பாராட்டியுள்ளார். இஸ்ரோவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பாலகன் 9 ராக்கெட் சோதனைக்கு பாராட்டு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் ககன்யான் மிஷன் 2022 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இது மேலும் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!