தமிழகத்தில் நாளை (மே 13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தேரோட்டம் நாளை (மே 13) தேதி நடைபெற இருக்கும் நிலையில், எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அன்றைய தினம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு:
கலைகளின் பிறப்பிடமாகவும், ஆன்மீகத்தின் உறைவிடமாகவும் திகழும் திருச்சி மாவட்டத்தில் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மலைக்கோட்டையில் உள்ள தாயுமானசுவாமி கோவில் திருநாவுக்கரசலும், திருஞானசம்பந்தராலும், பாடப்பெற்ற திருத்தலமாகும். திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.
TN Job “FB
Group” Join Now
ஆண்டுதோறும் இந்த கோவிலில் சித்திரை பெருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நாளை ( மே 12) ஆம் ஆண்டு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்புரிவார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்பட்டது போல தீ விபத்து ஏற்படாமல் தேரோட்டம் நடக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதன் படி தேரோட்டம் நடைபெறும் பகுதிகள் மற்றும் சுற்று பகுதிகளான சின்ன கடைவீதி, என்எஸ்பி சாலைம் நந்திகோவில் தெரு, ஆண்டார் வீதி, வடக்கு ஆண்டார் வீதி மற்றும் கீழ ஆண்டார் வீதி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதனால் பொதுமக்கள் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.