வணிக செய்திகள் – நவம்பர் 2018

0
வணிக செய்திகள் – நவம்பர் 2018
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 2018

இங்கு நவம்பர் மாதத்தின் முக்கிய நாட்கள், கருப்பொருள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

நவம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

வணிக செய்திகள்

ஜி.எஸ்.டி. சேகரிப்பு ரூ .1 லட்சம் கோடியைக் கடந்தது

  • கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது முதல், சரக்குகள் மற்றும் சேவை வரி வசூல், இரண்டாவது முறையாக ஒரு லட்சம் கோடியை கடந்தது. 2018 அக்டோபரில் சேகரிக்கப்பட்ட மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் 1 லட்சம் 710 கோடி ரூபாய் ஆகும்.

எல்.பி.ஜி. தொடர்பான சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்குஎண்ணெய் விற்பனை நிறுவனங்கள், பொது சேவை மையங்கள்கையெழுத்து

  • எல்பிஜி தொடர்பான சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் கையெழுத்திட்டன.

பிளாக்செயின் வர்த்தக நிதி பரிவர்த்தனை

  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் [ஆர்.ஐ.எல்] & எச்எஸ்பிசி பிளாக்செயின் வர்த்தக நிதி பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்தியது.

சீனாவில் அதிக சந்தை அணுகலுக்கு இந்தியா கோரிக்கை

  • சீனாவில் விவசாயப் பொருட்கள், மருந்துகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், சுற்றுலாத்துறை போன்ற துறைகளில் அதிக சந்தை அணுகலுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

டிஜிட்டல் முறையில் செலுத்தும் பணப்பரிவர்த்தனைகள் 2018 ஆகஸ்டில் 244 கோடியாக உயந்தது

  • கடந்த இரண்டு ஆண்டுகளில், டிஜிட்டல் முறையில் செலுத்தும் பணப்பரிவர்த்தனைகள் 2018 ஆகஸ்டில் 244 கோடியாக உயந்தது.
  • புதிய கட்டணம் முறைகளான, BHIM-UPI, AePS மற்றும் NETC ஆகியவை டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிப்பதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்தது.

அமெரிக்கா, சீனா வர்த்தக தகராறுகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை

  • அமெரிக்காவும் சீனாவும் தங்கள் வர்த்தக சச்சரவுகளை தீர்க்கும் முயற்சியில் பேச்சுவார்த்தையை தொடர உள்ளது.

நேதாஜி மூலம் மூவர்ணக் கொடி ஏற்றியதன் 75 வது ஆண்டு நிறைவு விழாவைக் குறிக்க 75 ரூபாய் நினைவு நாணயம் வெளியீடு

  • போர்ட் பிளேயரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் முதன்முறையாக மூவர்ணக் கொடி ஏற்றியதன் 75 வது ஆண்டு விழாவின் நினைவாக 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது அரசு.

அமெரிக்க அரசு ஜவாத் நஸ்ரல்லாவை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது

  • லெபனான் தீவிரவாத குழுக்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மகனான ஜவாத் நஸ்ரல்லாவை, ஒரு உலகளாவிய பயங்கரவாதி என அமெரிக்க அரசு அறிவித்தது.

யுஏஇ 2வது வருடம் தொடர்ச்சியாக வைப்ரன்ட் குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டில் பங்கேற்கிறது

  • ‘வைப்ரன்ட் குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில்’ ஐக்கிய அரபு எமிரேட் பங்கேற்கிறது, இரண்டாவது ஆண்டு தொடர்ச்சியாக கூட்டணி நாடாக பங்கேற்பு. இந்த உச்சிமாநாடு 2019 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 20 வரை நடைபெறுகிறது.

இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சியில் MSME பெவிலியன்

  • எம்.எஸ்.எம்.இ., க்கான மத்திய மாநில மந்திரி (ஐ / சி), கிரிராஜ் சிங், புதுதில்லியில் 38 வது இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சி (ஐஐடிஎஃப்) இல் MSME பெவிலியனை திறந்துவைத்தார்.

மூலதன உபரி பற்றிய பிரச்சினைகளை ஆராய்வதற்கு நிபுணர்குழுவை அமைக்க ரிசர்வ் வங்கி முடிவு

  • மத்திய வங்கியுடன் ரூ. 9.69 லட்சம் கோடி உபரி மூலதனத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஒரு உயர்-ஆற்றல் குழு ஒன்றை அமைக்க ஆர்.பி.ஐ. குழு முடிவு செய்துள்ளது.

எளிதில் வணிகம் செய்வதற்கான பெரும் சவால்

  • இந்தியாவின் பிரதம மந்திரி அடையாளம் காணக்கூடிய ஏழு வணிக பிரச்சனைகளை தொழிநுட்பங்களை பயன்படுத்தி தீர்ப்பதற்கான பெரும் சவால் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
  • தற்போதைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க இளம் இந்தியர்கள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களின் திறனைத் தூண்டுவதே இந்த சவாலின் நோக்கமாகும்.

NPCC மினிரத்னா அந்தஸ்து பெற்றது

  • தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட்(NPCC) இந்திய அரசின் மினிரத்னா: வகை-I அந்தஸ்து பெற்றுள்ளது.
  • நீர் வளங்கள் RD & GR அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ‘B’ வகை மத்திய பொது துறை நிறுவனமான NPCC, ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றிதழையும் பெற்றுள்ளது.

இந்தியா கிம்பர்லே செயல்முறைக்கு தலைமை தாங்கவுள்ளது

  • 2018 ஆம் ஆண்டு நவம்பர் 12 முதல் 16 ஆம் தேதி வரை ப்ரூசல்ஸ், பெல்ஜியத்தில் கிம்பர்லே செயல்முறை சான்றிதழ் திட்டம் (KPCS) செயல்முறை சான்றிதழ் திட்டம் (KPCS) நடைபெற்றது. 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் KPCS தலைமையை ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு அளித்தது.

EIB காற்று ஆற்றல் நிதி திட்டத்தை விரிவாக்கியது

  • ஐரோப்பிய முதலீட்டு வங்கி (EIB), தற்போது எஸ்.பி.ஐ. உடன் உள்ள கடன் திட்டங்களை விரிவாக்குவதன் மூலம் இந்தியாவின் காற்று ஆற்றல் திட்டங்களுக்கு அதன் ஆதரவை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

வங்கி செய்திகள்

ஆர்.பி.ஐ. உள்கட்டமைப்பு உருவாக்கத்திற்கான வெளிநாட்டுகடன்களை நிர்வகிக்கும் விதிமுறைகளை தாராளமயமாக்கியது

  • இந்திய ரிசர்வ் வங்கி உள்கட்டமைப்பு உருவாக்கத்திற்கான வெளிநாட்டு கடன்களை நிர்வகிக்கும் விதிமுறைகளை தாராளமயமாக்கியது. வெளிநாட்டு வணிக கடன் பெறும் குறைந்தபட்ச முதிர்வுத் தேவைகள், தகுதிவாய்ந்த கடனாளிகளால் எழுப்பப்பட்ட உள்கட்டமைப்பில் உள்ள ECB க்கள் முந்தைய ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு குறைக்கப்பட்டுள்ளன.

ஆர்.பி.ஐ. சர்வேயை துவக்கியுள்ளது

  • இந்தியாவின் ஸ்டார்ட் அப் துறையின் ஒரு சுயவிவரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வருவாய், இலாபங்கள் மற்றும் பணியாளர்கள் பொறுத்து அளவிடும் ஒரு ஆய்வை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook   Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!