
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 6 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? லீக்கான பட்டியல்! ரசிகர்கள் உற்சாகம்!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. தற்போது யார் யாரெல்லாம் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதற்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6:
விஜய் தொலைக்காட்சியில் இதுவரை பிக் பாஸ் 5 சீசன்கள் முடிவடைந்து விட்டது. சீசன் 5க்கு பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தலத்தில் ஒளிபரப்பப்பட்டது. கடந்த 5 சீசன்களை காட்டிலும் இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது. அதாவது 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அடுத்ததாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பப்படும் என ரசிகர்கள் நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
Exams Daily Mobile App Download
எப்படியும் குக் வித் கோமாளி சீசன் 3 முடிவடைந்த பிறகு தான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொடங்குவார்கள். பெரும்பாலும் ஜூலை மாதத்திற்குள் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விடும். தற்போது யார் யாரெல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பதற்கான தகவல்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அதாவது மௌனராகம் சீரியலில் நடித்து வரும் ரவீனா, ஜெனிபர், சரண்யா, பிரபல காமெடியன் ரெடின் கிங்ஸ்லே, தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகன் வினோத் பாபு என பலரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் திடீர் திருப்பம் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
மேலும் இசையமைப்பாளர் டி.இமானின் முதல் மனைவியான மோனிகா ரிச்சர்டும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு தான் டி.இமான் மோனிகாவை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொண்டார். அவ்வப்போது டி.இமான் குறித்து பகிரங்கமாக பேசி சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். மோனிகா ரிச்சர்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தால் பிக் பாஸ் வீடே போர்க்களமாக போகிறது. அது மட்டுமல்லாமல் இந்த சீசனை சிம்பு அல்லது கமலில் யார் தொகுத்து வழங்குவார் என்பது குறித்தும் பேச்சுவார்த்தை எழுந்து வருகிறது.