தேவநேயப்பாவணர் , பாவலரேறு பெருஞ்சித்திரனார் தொடர்பான செய்திகள்

0

தேவநேயப்பாவணர் , பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ் தொடர்பான செய்திகள்

தேவநேயப்பாவாணர்

 • தேவநேயப்பாவாணர் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகிலுள்ள பெரும்புத்தூரில் 07.02.1902 அன்று பிறந்தார்.
 • இவரது பெற்றோர் ஞானமுத்து மற்றும் பரிபூரணம் அம்மையார்.
 • 1924 இல் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்வில் இவர் மட்டுமே தேர்ச்சி பெற்றார்.
 • தேவநேசன் என்ற தனது வடமொழிப்பெயரை “தேவநேயன்” என்று மாற்றிக்கொண்டார்.
 • ஆம்பூர், பெரம்பூர், சேலம் போன்ற இடங்களில் ஆசிரியப் பணியாற்றினார்.
 • தம்நுண்மான் நுழைபுலம் வெளிப்படும் வண்ணம் பலநூல்கள் இயற்றினார்.
 • 1937 இல் இந்தி எதிர்ப்பு ஏற்பட்ட போது “கட்டாய இந்திக் கல்விக் கண்டனம்” என்னும் பெயரில் “செந்தமிழ்க் காஞ்சி” என்ற பாடல் தொகுப்பை வெளியிட்டார்.
 • ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம், இந்தி உள்ளிட்ட பதினெட்டு மொழிகளைப் பயின்ற இவர் தமிழே உலகின் மூத்த மொழி” என்ற தனது கருத்தை தனது ஆய்வுகளின் மூலம் எடுத்துக்காட்டினார்.

சிறப்புப் பெயர்கள்
1. செந்தமிழ்ச் செல்வர்
2. மொழிஞாயிறு
3. செந்தமிழ் ஞாயிறு
4. தமிழ்ப்பெருங்காவலர் என்பன போல் 174 சிறப்புப் பெயர்கள் ஆகும்.

 • 1968 இல் உலகத் தமிழ்க் கழகம் என்ற பெயரில் தனித் தமிழ் இயக்கம் ஒன்றைத் தொடங்கினார்.
 • மன்னிப்பு உருதுச்சொல் பொறுத்துக்கொள்க என்பது தமிழ்ச்சொல் என்றவர்.
 • எனக்கு வறுமையும் உண்டு, மனைவி மக்களும் உண்டு அவற்றோடு மானமும் உண்டு என்று மானத்தோடு வாழ்ந்தவர்.
 • உலகின் முதல் மாந்தன் தமிழன். தமிழன் தோன்றிய இடம் குமரிக் கண்டம். தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் என்றவர்.
 • 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழின் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
 • தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர்.
 • தமிழ் வளர்த்தால் பசியும் பட்டினியும் பஞ்சாய்ப் பறந்துவிடும் என எண்ணியவர்.
 • தேவநேயப் பாவணர் படைத்துள்ள நூல்களின் எண்ணிக்கை 43 ஆகும்.
 • 1947 இல் தமிழக அரசு “செந்தமிழ் சொற்பிறப்பியல்” அகரமுதலி இயக்கம் ஒன்றைத் தொடங்கிப் பாவணரை அதன் இயக்குநராக்கியது.
 • 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார்.
 • 1981 ல் இயற்கை எய்தினார்.

அகரமுதலி

 • அகரம் + ஆதி என்பதையே அகராதி என்பவர்.
 • அகராதி என்னும் சொல் தற்போதைய வழக்கில் “அகரமுதலி” என வழங்கப்படுகிறது.
 • பழங்காலத்தில் அகராதி, “நிகண்டு” என்று அழைக்கப்படுகிறது.
 • அகரமுதலி என்ற சொல்லாட்சியை வழக்கிற்குக் கொண்டு வந்தவர் தேவநேயப்பாவணர்.
 • சமண முனிவர்கள் தமிழுக்கு அளித்த அருங்கொடையே “நிகண்டுகள்” ஆகும்.
 • நிகண்டுகளில் பழமையானது சேந்தன் திவாகரம், ஆசிரியர் திவாகரர்.
 • சிறந்த நிகண்டு மண்டில புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு ஆகும்.
 • திருமூலரின் திருமந்திரத்தில் தான் முதன் முதலாக அகராதி என்ற சொல் இடம் பெற்றுள்ளது.
 • 1732 ல் வீரமாமுனிவர் தொகுத்த கதுரகராதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.
 • பெயர், பொருள், தொகை, தொடை எனும் நான்கு பகுதிகளைக் கொண்டது.
 • படங்களும் கூடிய 20ம் நூற்றாண்டு தமிழ் அகராதியை வெளியிட்டவர் இராமநாதன்.
 • 20ம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகராதி சென்னைப் பல்கலைக் கழக அகராதி. இதற்கு “தமிழ் லெக்சிகன்” என்ற பெயரும் உண்டு.
 • பெயர், கதை, வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கங்கள் இவற்றுக்கான விரிவான செய்திகளைக் கொண்டது. கலைக்களஞ்சியம் எனப்படும்.
 • கிரியா வின் தற்கால தமிழ் அகராதி முதன் முதலில் தமிழில் வெளிவந்த கணினி உதவியுடன் உருவாக்கப்பட்ட அகர முதலி.
 • 1902ஆம் ஆண்டு இலக்கிய புராண இதிகாச செய்திகளைக் கொண்டு வெளியான அபிதான கேலும் தமிழ்க் கலைக் களஞ்சியங்களில் முதன்மையானது.
 • 1934 இல் சிங்கார வேலனார் இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப் பொருள்களையும் சேர்த்து “அபிதான கோசம்” தமிழ்க் கலைக் களஞ்சியங்களில் முதன்மையானது.
 • தமிழ் வளர்ச்சிக் கழகம் பத்து தொகுதிகளாக கலைக்களஞ்சியத்தைத் தொகுத்து வெளியிட்டுள்ளது.
 • 1991 இல் அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் வெளியிடப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

 • பாவலரேறு பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார்.
 • இயற்பெயர் – இராச மாணிக்கம்
 • பெற்றோர் – துரைச்சாமி – குஞ்சம்மாள்
 • பெருஞ்சித்திரனார் பாவேந்தர் பாரதிதாசனின் தலை மாணாக்கர்.
 • தனித்தமிழ் மறவர், நக்கீரரைப் போன்ற உறுதி உடையவர்.
 • பெரியார்,பாவேந்தர்,பாவணர் கொள்கைவழி நிற்பவர்.
 • இவர் நடத்திய இதழ்கள்: தேன்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்.
 • உலகத் தமிழ் முன்னேற்றக் கழகத்தை ஏற்படுத்தியவர்.

இவர் எழுதிய நூல்கள்:
1. கொய்யாக்கனி
2. ஐயை
3. பாவியக் கொத்து
4. பள்ளிப்பறவைகள்
5. நூறாசிரியம்
6. கனிச்சாறு
7. அறுபருவத்திருக்கூத்து

 • “பள்ளிப் பறவைகள்” என்ற நூல் குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு,மணிமொழி மாலை என்னும் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது.
 • தமிழ் மொழியின் வளர்ச்சியை விட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடிய பெருஞ்சித்திரனார்.

PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!