மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? முக்கிய கணக்கீட்டு விவரங்கள் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? முக்கிய கணக்கீட்டு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? முக்கிய கணக்கீட்டு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? முக்கிய கணக்கீட்டு விவரங்கள் இதோ!

சில பிரிவை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வை தவிர, இந்த ஆண்டில் பதவி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

சம்பள உயர்வு

கடந்த 18 மாதங்களாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதான அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் முடிவு எடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் சம்பளம் தானாக உயரும். இருப்பினும், எவ்வளவு DA உயர்வு அமல்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஜனவரி 31 வரை அடுத்த 64 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!

ஆனால், AICPI குறியீட்டின் தரவுகளின்படி, 2022 இல் DA 3% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த DA உயர்வு தவிர, சில மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் பதவி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பட்ஜெட் 2022க்கு முன்னர் பொருத்துதல் காரணி குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இது தொடர்பாக மத்திய அரசு விரைவில் இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. மேலும் ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு மூலம் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமும் இந்த ஆண்டில் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 4 வரை 27 நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

இப்போது அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு கிடைத்தது என்றால் அவர்களின் மொத்த DA தொகை 34% ஆக இருக்கும். அதாவது ரூ.18,000 அடிப்படைச் சம்பளம் பெற்ற மத்திய அரசு ஊழியர் ஆண்டுக்கு ரூ.73,440 அகவிலைப்படியைப் பெறுவார். இது குறித்த ணக்கீடு விவரங்களை கீழே விரிவாக காணலாம்.

  • பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ 18,000
  • புதிய DA (34%) – ரூ 6120/மாதம்
  • DA இதுவரை (31%) – ரூ 5580/மாதம்
  • அகவிலைப்படி அதிகரித்தது – 6120- 5580 = ரூ 540/மாதம்
  • ஆண்டு ஊதிய உயர்வு – 540X12 = ரூ.6,480

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

  • பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ 56900
  • புதிய DA (34%) – ரூ 19346 / மாதம்
  • DA இதுவரை (31%) – ரூ 17639 / மாதம்
  • அகவிலைப்படி அதிகரித்தது 19346-17639 = 1,707 ரூபாய்/மாதம்
  • ஆண்டு ஊதிய உயர்வு 1,707 X12 = ரூ 20,484

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!