தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – வலுக்கும் கோரிக்கை!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகவிலைப்படி:

இந்தியாவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் வேளையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு முதல் அகவிலைப்படியை 2 கட்டங்களாக உயர்த்தியது.

சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகை பிரியர்கள் அதிர்ச்சி!

அதன்படி 31% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2022ம் ஆண்டு மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல் வெளியானது. கடந்த 1ம் தேதி மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை போல அகவிலைப்படி வழங்க கோரி ஈரோட்டில் நீதித்துறை ஊழியர்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். கரோனாவை காரணம் காட்டி 2 ஆண்டுகள் முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்புவிப்பை காலம் குறிப்பிடாமல் தடை செய்ததையும், அரசாணை எண் 36ஐயும் திரும்பப் பெற வேண்டும். நீதித் துறையில் தற்காலிக பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!