TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் வெளியீடு!

0
TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் வெளியீடு!
TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் வெளியீடு!
TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் வெளியீடு!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வான TNPSC குரூப் 4 வரும் ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

குரூப் 4 & VAO:

தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் குறித்து TNPSC தேர்வாணையம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 2, 2A தேர்வு அறிவிப்பு வெளியாகி அதற்கான விண்ணப்பபதிவுகளும் முடிவடைந்துள்ளது. அடுத்ததாக எண்ணிக்கையானோர் எழுத கூடிய குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பை ஏராளமான தேர்வர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் மார்ச் மாத இறுதியில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வான குரூப் 4 தேர்வின் அறிவிப்பு வெளியானது. தேர்வு மூலம் 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

கடந்த மார்ச் மாதம் ஆன்லைன் மூலம் விண்ணப்பபதிவுகள் தொடங்கி ஏப்ரல் 28ம் தேதியுடன் விண்ணப்பபதிவுகளும் முடிவடைந்தது. ஜூலை 27ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் பாடத்திட்டத்தை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வானது மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு வினாவிற்கு 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். குரூப் 4 தேர்வின் வினாத்தாள் 2 பகுதிகளாக இருக்கும்.

ஜூன் 10 வரை முழு ஊரடங்கு & 144 தடை உத்தரவு அமல் – கொரோனா புதிய பாதிப்புகள் எதிரொலி!

முதல் பகுதியில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு இதில் 100 வினாக்கள் இடம்பெறும். தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 40 மதிப்பெண்கள் பெறுவது அவசியமாகும். அடுத்ததாக பொது அறிவு பகுதியில் 75 மதிப்பெண்களும் பகுதியில் 25 வினாக்களும் இடம் பெறும். மேலும் வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல் ஆகிய பாட பகுதிகளில் இருந்து நடப்பு நிகழ்வு வினாக்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!