ஜூன் 10 வரை முழு ஊரடங்கு & 144 தடை உத்தரவு அமல் – கொரோனா புதிய பாதிப்புகள் எதிரொலி!

0
ஜூன் 10 வரை முழு ஊரடங்கு & 144 தடை உத்தரவு அமல் - கொரோனா புதிய பாதிப்புகள் எதிரொலி!
ஜூன் 10 வரை முழு ஊரடங்கு & 144 தடை உத்தரவு அமல் - கொரோனா புதிய பாதிப்புகள் எதிரொலி!
ஜூன் 10 வரை முழு ஊரடங்கு & 144 தடை உத்தரவு அமல் – கொரோனா புதிய பாதிப்புகள் எதிரொலி!

உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள நொய்டா மற்றும் காஜியாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா புதிய பாதிப்புகள் இரட்டை இலக்கங்களில் பதிவு செய்யப்பட்டு வருவதை அடுத்து அங்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் 144 தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுகள் மீண்டும் கவலையை எழுப்பியுள்ள நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. அதாவது உத்தரபிரதேச எல்லைக்குட்பட்ட கௌதம் புத்த நகர், நொய்டா மற்றும் டெல்லி என்சிஆரின் கீழ் வரும் காசியாபாத் ஆகிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவு உள்ளிட்ட சில கொரோனா தடுப்பு தொடர்பான தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் குறித்து கௌதம் புத்த நகர் கமிஷனரேட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஊரடங்கு அமலில் இருக்கும் பகுதிகளில், மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனுடன், எந்தவிதமான வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் தொடர்பான நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதலைப் பின்பற்றிய பின்னரே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். மேலும், ஒரே இடத்தில் 4 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இந்த உத்தரவின்படி, எந்த வகையான பிரச்சனையாக இருந்தாலும் 144 வது பிரிவை மீறி மட்டுமே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணம் செய்ய திட்டமிடும் பயணிகளின் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய தகவல்!

இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 270 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக கௌதம் புத் நகரில் 117, காஜியாபாத்தில் 55, லக்னோவில் 26 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. இதன் காரணமாக காஜியாபாத் மற்றும் கவுதம் புத் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நொய்டாவில் மே 31 வரையும், காஜியாபாத்தில் ஜூன் 10 வரையும் பிரிவு 144 அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பள்ளிகள் வழக்கம் போலவே செயல்படும் என்றும் மாணவர்கள் முறையான கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here