நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 11, 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 11, 2019

ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் எத்தனை ஆண்டு திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்கிறார்?

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு அமைச்சகத்தின் மேல் அதிகாரிகளிடம் நன்கு திட்டமிடப்பட்ட இலக்குகளுடன் கொண்ட ஐந்தாண்டு திட்ட ஆவணம் ஒன்றை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

UNDP திட்டத்தின் கீழ் இந்தியாவில் எத்தனை இயற்கை நிலங்களின் அடையாளம் காணப்பட்டுள்ளன?

மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்கள் UNDP இன் கீழ் தேர்வு செய்யப்பட்டு, இந்த ஆண்டு துவங்கும் ஆறு ஆண்டு திட்டத்திற்கு ரூ.298 கோடிக்கு GCF வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக சுமார் 25 இயற்கை நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்பது இடங்கள் ஆந்திராவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் ‘ஹால் ஆஃப் ஃபேம் 2019'இல் எந்த மாநிலத்தின் ஜோனெல் சூகைஜம் சேர்க்கப்பட்டுள்ளது?

மணிப்பூரைச் சேர்ந்த 22 வயதான சிவில் பொறியியலாளர் ஜோனெல் சூகைஜம், வாட்ஸ் அப்பில் பக்கை கண்டறிந்ததற்காக மாபெரும் சமூக ஊடகம் தனக்கு 5000 டாலர் வழங்கியதாகவும், மேலும் அவரை பேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் 2019 பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான ‘பேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம்’ 94 பேர் பட்டியலில் தற்போது திரு. சூகைஜம் பெயர் 16வது இடத்தில் உள்ளது.

எந்த மாநிலத்தின் பொது விநியோக முறையில் ராகி(தினை) வழங்க முடிவு செய்துள்ளது?

பழங்குடியினரின் பொருளாதாரத்தை வளர்க்கவும், பழங்குடிப் பொருளாதாரத்திற்கு மிகுந்த உற்சாகத்தை வழங்கவும், ஒடிசா அரசாங்கம், பொது விநியோக முறையில், அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொது விநியோக முறையில் ரூபாய் ஒன்றிற்கு ஒரு கிலோ ராகி(தினை) வழங்க முடிவு செய்துள்ளது.

எந்த நாட்டின் பிரதமர், 2021ம் ஆண்டு முதல் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்குகள் தடை செய்வதாக அறிவித்துள்ளார்?

கனடா நாட்டின் பிரதமர், ஜஸ்டின் ட்ரூடியூ ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை பயன்படுத்த 2021 ம் ஆண்டு முதல் தடை செய்வதாக அறிவித்துள்ளார். சுமார் 70 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளான ஒற்றை பயன்பாட்டு பொருட்கள் கடல் சூழலை மாசுபடுத்துகின்றன.

எந்த மாநிலத்தில் V.O.C போர்ட் டிரஸ்ட் அமைந்துள்ளது?

தொழில் செய்ய உகந்த நாடு திட்டத்தின் கீழ் இ- சீல் செய்யப்பட்ட தொழிற்சாலை ஏற்றுமதி கொள்கலனின் நேரடி போர்ட் நுழைவு (DPE) வசதிக்காக தூத்துக்குடியில் உள்ள வி.ஓ.சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட் மற்றும் மத்திய கிடங்குக் கழகம் (CWC) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.

UEFA பட்டத்தை வென்ற அணி எது?

UEFA தேசிய லீக் போட்டியில் வெற்றி பெற்ற முதல் அணி போர்ச்சுகல் ஆகும். இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. போர்ச்சுகல் அணிக்காக கோன்காலா குயெட்ஸ் ஒரு கோலை அடித்தார்.

யுவராஜ் சிங் எந்த அணிக்கு எதிராக ஆறு சிக்சர்களை அடித்தார்?

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன் மூலம் அவரது 19 வருட கால கிரிக்கெட் வாழ்க்கை நிறைவடைந்தது. தென்னாப்பிரிக்காவில் 2007 ஆம் ஆண்டு உலக டி 20 கிரிக்கெட்டில் யுவராஜ் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்து சாதனை படைத்தார். ஒரு சர்வதேச போட்டியில் இந்த சாதனையை அடைந்த இரண்டாவது வீரர் (ஹெர்செல் கிப்ஸ் பிறகு) யுவராஜ் ஆவார்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here