நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 12, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 12, 2019

முக்கியமான நாட்கள்

ஜூன் 12 – குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம்
 • சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) 2002ல் குழந்தை தொழிலாளிகள் குறித்து உலக அளவிலான கவனத்தை ஈர்க்கவும், அதை அகற்ற தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்த குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினத்தை தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ம் தேதி, இந்த உலக தினம் அரசாங்கங்கள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் அமைப்புகள், மக்கள் சமுதாயம், உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் இடையே குழந்தைத் தொழிலாளர்களின் நிலைமையை உணர்த்தவும், அவர்களுக்கு உதவுவதற்கு என்ன செய்யலாம் என்பதை விளக்கவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
 • 2019 தீம்: Children shouldn’t work in fields, but on dreams!

தேசிய செய்திகள்

சூறாவளி வாயு மிகவும் கடுமையான சூறாவளி புயலாக  தீவிரமடைகிறது
 • கிழக்கு-மத்திய அரேபிய கடலில் வாயு சூறாவளி கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது. தற்போது கோவாவின் மேற்கு-வடமேற்கு பகுதியில் 420 கிமீ தொலைவில் ,மும்பையின் தெற்கே தென்மேற்கு பகுதிகளில் 320 கிமீ தொலைவில் மற்றும் குஜராத்தின் வேராவால் பகுதியில் 420 கிமீ தொலைவில் உள்ளது.
 • தேசிய பேரிடர் மீட்பு படை(NDRF) உள்ளூர் நிர்வாகத்திகுடன் இணைந்து குஜராத்தில் 35 குழுக்களும்,டீயுவில் நான்கு குழுக்களையும் நிறுத்தியுள்ளது. மாநில பேரிடர் மீட்பு படை, இராணுவம், கடலோர காவல்படை மற்றும் பி.எஸ்.எப் ஆகியவற்றின் மீட்புக் குழுக்களும்  நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
கர்நாடகா
கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தின் அமசேபைலு முதல் சூரிய ஆற்றல் வாய்ந்த கிராம பஞ்சாயத்தாக உருவானது
 • கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தின் குண்டபுரா தாலுக்காவில் உள்ள அமசேபைலு (Amasebailu) முதல் சூரிய  ஆற்றல் கொண்ட கிராம பஞ்சாயத்து ஆகும்.மொத்தம் 2.13 கோடி ரூபாய் செலவில் சூரிய மின் விளக்குகள் 1800 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு  வழங்கப்பட்டுள்ளன . இந்த திட்டம் 30:20 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதியளிக்கப்பட்டது மற்றும் மீதமுள்ள நிதி பஞ்சாயத்து & தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டது.
அசாம்
அசாமில் வளர்ந்து வரும் நோய்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் குறித்து அசாம் ஆய்வு
 • அசாமில் புதிய நோய்களின் தொல்லைகள் அதிகரித்து வருவதால், மருத்துவ ஆய்வில் உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களைப் பயன்படுத்துவதன் தாக்கம் பற்றிய ஒரு ஆய்விற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் (ICMR) முறையிடத் திட்டமிட்டுள்ளது மாநில அரசு.
 • இந்த மாதத்தின் 14 ஆம் தேதி முதல், சென்னையின் அப்பல்லோ மருத்துவமனை நிறுவன லிமிடெட் உடன் இணைந்து தனியார்-பொது கூட்டு முறையில் மாநிலத்தில் பிரதம மந்திரியின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தை அமைச்சர் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தார் . அசாமில் 18 இடங்களில் இலவச டையலிசிஸ் வசதி கிடைக்கவுள்ளது.
மிசோரம்
பசுமை மிசோரம் தினம்
 • மிசோரமில், பசுமை மிசோரம் தினம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த தினம் மரக்கன்றுகளை வழங்குதல் மற்றும் நடுதல் போன்ற நிகழ்ச்சிகளோடு கொண்டாடப்பட்டது.  இதன் நோக்கம் பசுமை சூழல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதாகும்.பசுமை மிசோரம் தினத்தை கடந்த 20 ஆண்டுகளாக மிசோரம் மாநிலம் கொண்டாடி வருகிறது.
தெலுங்கானா
தெலுங்கானாவில் பழங்குடியினருக்கு சுகாதார வசதிகள் 
 • பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் (PVTGs) என வகைப்படுத்தப்பட்டுள்ள கொல்லம், தொட்டி மற்றும் மானே ஆதிவாசிகளின் சுகாதார வசதியை மேம்படுத்துவதற்கு ஒரு பிரச்சாரம் தெலங்கானாவில் தொடங்கப்பட்டது. உத்னூர் ஒருங்கிணைந்த பழங்குடி மேம்பாட்டு ஏஜென்சியின் கீழ் பிரிக்கப்படாத அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு சுகாதார வசதியை மேம்படுத்துவதில் இது ஒரு பெரிய முன்னேற்றம் ஆகும்.
 • நிஜாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (என்ஐஎம்எஸ்), ஹைதராபாத்தைச் சேர்ந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் குழு, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. PVTGகளுக்கான மத்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்பட்டுள்ளது .

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

நிலத்தடி நீர் சமுத்திரங்களை சந்திக்கும் உலக வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள்
 • பூமியெங்கும் நிலத்தடி நீர் கடல்களை சந்திக்கும் இடத்தை கண்டறிந்து விஞ்ஞானிகள் மிக தெளிவான வரைபடங்களை உருவாக்கியுள்ளனர்.
 • ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், கிட்டத்தட்ட ஒரு பாதி அளவு  நிலத்தடி நன்னீர்  வெப்ப மண்டலத்தின் அருகே உள்ள கடலில் பாய்கிறது என கூறியுள்ளனர். இந்த கண்டுபிடிப்புகள் கடலோர சமூகங்கள் தங்கள் குடிநீரை பாதுகாக்க மற்றும் நிர்வகிக்க உதவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிக மற்றும் பொருளாதார செய்திகள்

இன்போசிஸ் லண்டனில் டிசைன் ஸ்டூடியோ (design studio) திறக்கிறது
 • ஒரு அடுத்த தலைமுறை டிஜிட்டல் சேவைகள் மற்றும் பிரதான ஆலோசனை நிறுவனமான இன்ஃபோசிஸ்,லண்டனில் ஷெர்டிச்சில் தனது அனுபவ வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்பு ஸ்டூடியோவைத் திறந்துள்ளது.
 • இன்போசிஸிற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் ஒத்துழைக்க மற்றும் புதிய வடிவமைப்புகளை உருவாக்க மற்றும் ஒருங்கிணைக்க செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் யதார்த்தம் மற்றும் 5 ஜி உட்பட சமீபத்திய தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்த ஸ்டூடியோ வழங்கவுள்ளது.

வங்கி செய்திகள்

ஆர்.பி., .டி.எம். கட்டணங்களை ஆய்வு செய்வதற்கு ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளது
 • இந்திய ரிசர்வ் வங்கி ஏ.டி.எம். கட்டணங்கள் பற்றிய முழு வரம்புகளை ஆய்வு செய்ய ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி வி.கே. கண்ணன், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்(National Payments Corporation of India), எஸ்.பி.ஐ., எச்.டி.எஃப்.சி, ஏ.டி.எம் தொழில் கூட்டமைப்பு மற்றும் டாடா கம்யூனிகேஷன்ஸ் பெமென்ட் சொலுயூஷன்ஸ் லிமிடெட் ஆகியவைகளின் உயர் அதிகாரிகளை கொண்ட குழுவிற்கு தலைவராக இருப்பார் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
RBI, NEFT மற்றும் RTGS பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்திற்கு தள்ளுபடி
 • இந்திய ரிசர்வ் வங்கி, நிதிகளின் டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதன் நோக்கமாக,தேசிய மின்னணு நிதி பரிமாற்றங்களான NEFT மற்றும் Real Time Gross Settlement – RTGS மூலம் செய்யும் பரிவர்த்தனைகளுக்கான அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி மும்பையில் வெளியிட்ட அறிக்கையின் படி, வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை ஜூலை 1 முதல் அளிப்பதற்கு அணைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

செயலி மற்றும் வலைத்தளம்

கோவா அரசாங்கம் டிஜிட்டல் தளம் ‘agricloud ‘ அறிமுகம்
 • கோவா அரசாங்கம் விவசாயிகளின் மானியங்கள் மற்றும் உள்ளீடுகளை கண்காணிக்கும் வகையில் ‘agricloud ‘ என்ற டிஜிட்டல் தளம் ஒன்றை நிறுவ உள்ளது. இந்த டிஜிட்டல் தளம் விவசாயிகளுக்கு உத்தியோகபூர்வ ஆலோசனை, வானிலை, சந்தை விலைகள் ஆகியவற்றைப்  பற்றிய தகவல்களைப் பெற உதவும். விவசாயிகள் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்க ‘agricloud ‘  என்ற டிஜிட்டல் தளம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  .

விளையாட்டு செய்திகள்

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்
 • ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் மாகோவில் ஜூன் 26 முதல் 30 வரை நடக்க இருக்கிறது. 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் நடைபெறவிருக்கும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் போட்டியிடுகின்றனர். இதில் போட்டியிடும் வீரர்களின் தேர்வு மே மாதம் சிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது மேலும் இவர்கள்  பிரிட்டிஷ் பயிற்சியாளர் கிறிஸ் ரிடெரின் கீழ் பயிற்சி பெறுகின்றனர்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 12, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!